அசைவ உணவு பிரியரா? எந்த ஊரில் என்ன சாப்பிடலாம் பாருங்க!
Anoj, Samayam Tamil
அசைவ உணவுகள்
இந்தியாவில் சில நகரங்கள் அசைவ உணவு பிரியர்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாக திகழ்கிறது. நீங்கள் அங்கு செல்கையில் என்ன மாதிரியான அசைவ உணவுகளை ட்ரை செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
ஹைதராபாத்
ஹைதராபாத் நகரம் அதன் தனித்துவமான பிரியாணிக்கு பெயர்பெற்றது. பாசுமதி அரிசி, சாஃப்ட் இறைச்சி மற்றும் மலாசா கலவை கொண்ட அட்டகாசமான சுவையை தரக்கூடும். இதுதவிர, ஹலீம், கபாப் ஆகியவை பிரபலமான உணவுகளாகும்
Image Source: pexels-com
கொல்கத்தா
கொல்கத்தாவில் மீன் உணவுகளை முயற்சிக்க மறக்காதீர்கள். அவை பாரம்பரிய பெங்காலி ஸ்டைலில் செய்வதால் அட்டகாசமாக இருக்கக்கூடும். மீன் குழம்பு, மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கோஷா ஆகியவை சாப்பிட வேண்டிய உணவுகளாகும்
Image Source: istock
லக்னோ
நவாப்களின் நகரம் என அழைக்கப்படும் லக்னோவில் Galouti கபாப் மற்றும் Awadhi பிரியாணி ஆகியவை கட்டாயம் ருசி பார்க்க வேண்டிய அசைவ உணவுகளாகும்
Image Source: istock
டெல்லி
தலைநகர் டெல்லிக்கு சென்றால் பட்டர் சிக்கன், கபாப் மற்றும் மட்டன் நிஹாரி சாப்பிட மறக்கக்கூடாது. அதேபோல், சாலையோர அசைவ உணவுகளையும் ருசி பார்க்கலாம்
Image Source: istock
கொச்சி
கொச்சி நகரமானது கேரள மீன் குழம்பு, நெய் மட்டன் வறுவல், இறால் மொய்லி மற்றும் பிற கடல் உணவுகளுக்கு பெயர்பெற்றது. இவற்றில் தேங்காய் சேர்க்கப்படுவதால் தனித்துவமான சுவையை கொண்டிருக்கும்
Image Source: istock
கோவா
கோவா செல்கையில் அதன் பாரம்பரிய Goan உணவுகளை சாப்பிட மறக்கக்கூடாது. மீன் கறி, போர்க் விண்டலு, இறால் பல்சாவ் ஆகியவை சாப்பிட வேண்டிய உணவுகளாகும்
Image Source: istock
மும்பை
பாம்பே வாத்து கறி, பட்டர் சிக்கன், மட்டன் கீமா பாவ் ஆகியவை மும்பை நகரில் மிஸ் செய்யக்கூடாத உணவுகள். சாலையோர கடைகளில் பல வகையான இறைச்சி மற்றும் கடல் உயிரினங்களை சாப்பிட முடியும்
Image Source: istock
சென்னை
சென்னையில் பல வகையான அசைவ உணவுகளை ருசி பார்க்க முடியும். செட்டிநாடு சிக்கன், மட்டன் சுக்கா, மீன் குழம்பு மற்றும் பிற காரமான செட்டிநாடு உணவுகளை சாப்பிட செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!
Next: 'திருவனந்தபுரத்தில்' சுற்றி பார்க்க சூப்பரான சுற்றுலா தலங்கள்