[ad_1] அடிக்கடி தொண்டை வலி ஏற்பட்டால் எலுமிச்சையுடன் இதை சேர்த்து ஜூஸ் போட்டு குடியுங்கள்

Jul 15, 2024

அடிக்கடி தொண்டை வலி ஏற்பட்டால் எலுமிச்சையுடன் இதை சேர்த்து ஜூஸ் போட்டு குடியுங்கள்

Nivetha

சளி, தொண்டை வலி

பருவக்கால மாற்றத்தால் பலருக்கும் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இதனை மருந்து மாத்திரையின்றி குணப்படுத்த ஒரு இயற்கை வைத்தியத்தை இப்பதிவில் பார்ப்போம்.

Image Source: istock

எலுமிச்சையுடன் தேன்

தொண்டை வலி நீங்க எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்தால் குணமாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இவை இரண்டிலும் ஆன்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்துள்ளதால் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

Image Source: pixabay

தேன்

சுத்தமான தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதோடு சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்களை தீர்க்க வல்லது. ஆனால் ஒரு வயது நிரம்பாத பச்சிளம்குழந்தைகளுக்கு தேனையும் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கொடுக்கக்கூடாது. அது அவர்களுக்கு நஞ்சாக மாறும் அபாயம் உள்ளது.

Image Source: pixabay

மிளகுத்தூள்

இந்த கலவையோடு சிறிதளவு மிளகுத்தூளையும் சேர்த்து குடிக்கலாம். இது வலி, வீக்கம், புண் ஆகியவைகளுக்கு அருமருந்தாகிறது.

Image Source: pixabay

இஞ்சி

இந்த ஜூஸில் இஞ்சி சாற்றையும் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் என அனைவருமே இந்த ஜூஸை குடிக்கலாம்.

Image Source: pixabay

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 200 மிலி தண்ணீர் ஊற்றி சிறிய துண்டு இஞ்சியை போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் தேன், சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து குடியுங்கள். மிளகுத்தூளை சேர்த்து குடித்தால் கூடுதல் பலன் கிட்டும்.

Image Source: pexels-com

ஒவ்வாமை

கூறப்பட்டுள்ள பொருட்களால் யாருக்கேனும் ஒவ்வாமை பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

Image Source: istock

எச்சரிக்கை

தொண்டையில் புண் ஆறாமல் வலி அதிகமாக காணப்பட்டால் குறிப்பாக குழந்தைகளுக்கு பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

Image Source: istock

மருத்துவர் பரிந்துரை

என்னதான் இயற்கை மருத்துவங்களில் நிவாரணம் கிடைத்தாலும், வலியின் தீவிரம் அதிகமாகும் பட்சத்தில் மருத்துவமனை சென்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்து கொள்வது அவசியம்.

Image Source: pixabay

Thanks For Reading!

Next: தினமும் ஒரு தேங்காய் சில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

[ad_2]