Jul 2, 2024
நம்முள் சிலருக்கு அடிக்கடி வாயில் புண் அல்லது நாக்கில் புண் ஏற்படும். அதற்கு என்ன காரணம் என்பதை தான் இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.
Image Source: istock
நம் உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. இதில் வைட்டமின் பி6 என்பது மிக முக்கியம், இது உடலில் குறைபடும் பட்சத்தில் வாய் மற்றும் நாக்கில் புண் உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.
Image Source: istock
வைட்டமின் பி6 குறைப்பாட்டால் வாய் புண், உதடு வறண்டு போகுதல், உதடுகள் வெடிப்பு, வாயை சுற்றி வறட்சி, நாக்கில் புண், நாக்கில் வலி மற்றும் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
Image Source: istock
உடலில் வைட்டமின் பி6 குறைபாடு ஏற்பட்டால் சருமத்தில் சிவந்த செதில் செதிலான சரும வெடிப்பு உள்ளிட்ட சருமம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
Image Source: istock
இந்த வைட்டமின் குறைபாட்டால் கை, கால்களில் ஊசி அல்லது முள் குத்துவது போன்ற உணர்வு, மரத்து போகுதல், நரம்புகள் சேதமடைதல், தசை பலவீனம் உள்ளிட்டவை உண்டாகும்.
Image Source: istock
இந்த குறைபாடு உடலில் ஏற்படும் பட்சத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி குறைந்து ரத்த சோகை பாதிப்பு உண்டாகும். இதன் காரணமாக உடல் சோர்வு, தலைவலி, பசியின்மை, மூச்சு திணறல், தலைச்சுற்று போன்ற உபாதைகள் உண்டாகும்.
Image Source: istock
இந்த வைட்டமின் குறைபாடு காரணமாக மனதளவிலும் பெருமளவு பாதிப்புகள் ஏற்படுமாம். எரிச்சல், கோபம், மன அழுத்தம், குழந்தைகள் அடிக்கடி அழுகுதல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள்.
Image Source: istock
இந்த வைட்டமின் பி6 குறைபாட்டின் அறிகுறிகள் உங்களுக்கு தெரியும் பட்சத்தில் அதனை அதிகரிக்க கூடிய தினமும் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள், பப்பாளி, பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகள், சாலமீன், கோழி உள்ளிட்டவைகளை தினசரி உணவில் எடுத்து கொள்ளுங்கள்.
Image Source: pixabay
பாதிப்புகளின் தீவிரம் அதிகமாக தென்படும் பட்சத்தில் மருத்துவரை அணுகி தக்க ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை பெறுவது நல்லது.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!