[ad_1] அட்டகாசமான 'பயண அனுபவங்கள்' தரக்கூடிய அந்த 9 இடங்கள்

May 10, 2024

அட்டகாசமான 'பயண அனுபவங்கள்' தரக்கூடிய அந்த 9 இடங்கள்

Anoj

நீரில் மிதக்கும் வீடுகள்

மாலத்தீவு, போரா போரா அல்லது Tahiti போன்ற இடங்களில், தண்ணீரில் மிதக்கும் வீடுகளில் ஒருமுறையாவது தங்கி ஓய்வு எடுக்க வேண்டும். தெளிவான நீரை பார்த்தப்படியே காலையில் எழுந்திருப்பது, மீன்களுடன் சேர்த்து நீச்சலடிப்பது போன்றவை சிறப்பான அனுபவத்தை தரக்கூடும்

Image Source: unsplash-com

மச்சு பிச்சு ஹைக்கிங்

இன்கா பாதை வழியாக பெருவில் உள்ள மச்சு பிச்சுவின் புகழ்பெற்ற கோட்டைக்கான மலையேற்றம் பயணம் புதுமையான அனுபவத்தை தரக்கூடும். கரடுமுரடான மலைப் பகுதிகள், இன்கா இடிபாடுகள் மற்றும் காடுகள் வழியாக பயணிக்க வேண்டியிருக்கும்

Image Source: unsplash-com

எவரெஸ்ட் பேஸ் கேம்ப்

நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப் மலையேற்றம், சாகச ஆர்வலர்களின் கனவு ஸ்பாட்டாகும். அழகிய மலைப்பாதையில் பயணித்து இலக்கை அடையும் போது எவரெஸ்ட் சிகரத்தின் சிறந்த காட்சியை ரசிக்கலாம். இந்த பயணம் வானிலை, கடினமான நிலப்பரப்பால் பல சவால்களை கொண்டிருக்கும்

Image Source: unsplash-com

பிரம்மிப்பூட்டும் சாலை பயணம்

ஆஸ்திரேலியாவின் Great Ocean Road-ல், பிரமிப்பில் ஆழ்த்தும் சாலை பயணத்தை மேற்கொள்ள முடியும். 12 அப்போஸ்தலர்களின் பாறை வடிவங்கள், பசுமையான மழைக்காடுகள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடலோரக் காட்சிகளை அனுபவிக்கலாம்

Image Source: unsplash-com

உலகின் 7 அதிசயங்கள்

தாஜ்மஹால், கொலோசியம், மச்சு பிச்சு, கிறிஸ்ட் தி மீட்பர், சிச்சென் இட்ஸா, பெட்ரா மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றை வாழ்வில் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும். ஒவ்வொரு தளமும் ஒரு தனிப்பட்ட அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

Image Source: pexels-com

ஆப்பிரிக்க சஃபாரி

ஆப்பிரிக்காவின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு காப்பகங்களில் சஃபாரி ரைடு தவறாமல் மேற்கொள்ளுங்கள். இந்த சஃபாரியில் சிங்கம், யானை, எருமை, சிறுத்தை மற்றும் காண்டாமிருகம் ஆகிய விலங்குகளை அதன் இருப்பிடத்திலே கண்டு ரசிக்க முடியும்

Image Source: unsplash-com

கிரேக்க தீவுகள் பார்வையிடுவது.,

Aegean கடல் வழியாக பயணித்து மாயாஜால கிரேக்க தீவுகளை ஆராய செய்யுங்கள். பழங்கால இடிபாடுகள், அழகான கிராமங்கள் மற்றும் அழகிய கடற்கரைகளை ரசித்தப்படி அந்த இடத்தின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Image Source: unsplash-com

நார்தர்ன் லைட்ஸ்

நார்வே, ஐஸ்லாந்து, கனடா அல்லது அலாஸ்கா போன்ற இடங்களில் Northern lights எனும் வானியல் அதிசயத்தை கண்டு ரசிக்கலாம். வளிமண்டத்தில் நடக்கும் வேதியியல் வினையால், வானில் நீளம், பச்சை நிற ஒளிகள் தெரியும். அவற்றை இரவு நேரத்தில் பார்ப்பது கண்கொள்ள காட்சியாக இருக்கும்

Image Source: unsplash-com

அமேசான் மழைக்காடு

அமேசான் மழைக்காடுகள், பூமியில் பல்லுயிர் நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும். அமேசான் நதியில் பயணிப்பது, அபூர்வமான வனவிலங்களை சந்திப்பது மட்டுமின்றி பழங்குடி சமூகங்களின் தனித்துவமான கலாச்சாரங்களையும் அனுபவிக்க செய்யலாம்

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: கோடையில் குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் இதோ!

[ad_2]