Jul 2, 2024
2024 டி20 உலக கோப்பையை இந்தியா வென்றதை தொடர்ந்து, கேப்டன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 5 சதம் உட்பட 4,231 ரன்கள் அடித்துள்ளார். இவர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்
Image Source: instagram-com/rohitsharma45
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், 2024 டி20 உலக கோப்பையுடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2009 முதல் 2024 வரை, 74 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 515 ரன்களும், 54 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்
Image Source: instagram-com
டி20 உலக கோப்பை தொடரில் 2 முறை தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆவார். இதுவரை 1 சதம், 38 அரை சதம் என 4,188 ரன்கள் எடுத்துள்ளார்
Image Source: instagram-com/virat-kohli
தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசென், 2024 ஜனவரி 8ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். 2019ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் அறிமுகமான கிளாசென், 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்
Image Source: instagram-com/heinie45
39 வயதான கேதர் ஜாதவ், 2024 ஜூன் மாதம் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணிக்காக 73 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்
Image Source: instagram-com/kedarjadhavofficial
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்தாண்டு அறிவித்தார். இந்திய அணிக்காக 94 ஒருநாள் போட்டி, 60 டி20 போட்டி மற்றும் 26 டெஸ்டில் விளையாடியுள்ளார்
Image Source: instagram-com/dk00019
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், 2024 டி20 உலக கோப்பையுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டி20 கிரிக்கெட்டில் 3277 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக 2023 ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்
Image Source: instagram-com/davidwarner31
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், 2024 டி20 உலக கோப்பை தொடரில் அணியின் மோசமான தோல்விக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். டி20யில் 317 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 211 விக்கெட்டுகளும் சாய்த்துள்ளார்
Image Source: instagram-com
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ, 2024 மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2024 டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்காததை தொடர்ந்து, இந்த முடிவை எடுத்தார்.
Image Source: instagram-com/munro82
Thanks For Reading!