May 1, 2024
அதிகமான உணவு சாப்பிட்ட பிறகு மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அவை சிறந்த செரிமானம் மற்றும் எடை அதிகரிப்பை தடுக்க உதவக்கூடும். அத்தகைய உணவுகள் பற்றி இங்கு விரிவாக காணலாம்
Image Source: istock
சீரகத்தில் செரிமான என்சைம் தூண்டக்கூடிய பண்புகள் உள்ளது. உணவு சாப்பிட்டதும் ஒரு கப் சீரக தண்ணீர் குடிப்பது, செரிமானத்தை சீராக்குவதோடு மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்கிறது.
Image Source: istock
இரவு முழுவதும் ஓமம் ஊறவைத்த தண்ணீரை, உணவுக்கு பிறகு குடிப்பது செரிமானத்திற்கு உதவுவதோடு மெட்டபாலிசத்தை அதிகரிக்க பயன்படக்கூடும். ஒரு கிளாஸ் ஓமம் தண்ணீர் செரிமான என்சைம் தூண்டுவது மட்டுமின்றி ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மேம்படுத்த செய்கிறது
Image Source: istock
கிரேக்க தயிர் சிறந்த புரோபயாடிக் உணவாகும். அதில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், சீரான செரிமானத்திறகும் மெட்டபாலிசம் ஊக்குவிக்கவும் பயன்படக்கூடும். உணவு சாப்பிட்டது ஒரு கப் கிரேக்க தயிரில் பொடித்த பாதாம் அல்லது பழங்களை சேர்த்து சாப்பிடலாம்
Image Source: pexels-com
காரமான உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரிப்பது மூலம் அட்ரினலின் வெளியீட்டை தூண்டி மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க செய்கிறது. நன்றாக உணவு சாப்பிட்ட பிறகு, காரமான தின்பண்டங்கள் சாப்பிடுவது கலோரி எரிப்பை அதிகரித்து உடல் எடையை கட்டுப்படுத்த செய்கிறது
Image Source: pexels-com
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கின்றன. இவை மெட்டபாலிசத்தை ஊக்குவிப்பதோடு செரிமானத்தை சீராக்க உதவுகிறது. உணவுக்கு பிறகு பெர்ரி பழங்கள் சாப்பிடுவதை தினசரி வழக்கமாக வைத்திருங்கள்
Image Source: istock
கிரீன் டீயில் காணப்படும் Catechins கலவை, மெட்டபாலிசத்தை ஊக்குவிப்பதோடு கொழுப்பு எரிப்பை துரிதப்படுத்த செய்கிறது. உணவுக்கு பிறகு ஒரு கப் கிரீன் டீ குடிப்பது நல்ல பலனை தரக்கூடும்
Image Source: pexels-com
நன்றாக உணவு சாப்பிட்ட பிறகு, புரோட்டீன் நிறைந்த தின்பண்டங்களை சாப்பிடுவது மெட்டபாலிசம் செயல்முறையை விரைவுபடுத்த உதவக்கூடும். ஏனெனில், புரோட்டீன் செரிமான பிராசஸில் அதிக ஆற்றலை பயன்படுத்துவதால், மெட்டபாலிசம் வேகமும் அதிகரிக்கக்கூடும்
Image Source: istock
பச்சை இலை காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை மெட்டபாலிசம் செயல்முறையை தூண்டுவதோடு வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்கக்கூடும். கீரை சாலட் சாப்பிடுவது சிறந்த தேர்வாகும்
Image Source: istock
Thanks For Reading!