Jul 3, 2024
கோடை காலம் என்றாலே வெயிலில் தாக்கத்தினை தணிக்க மக்களும் பழச்சாறுகளை விரும்பி வாங்கி குடிக்கிறார்கள். ஆனால் தாகத்தினை தணிக்க தண்ணீர் தான் குடிக்க வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.
Image Source: pexels
குறிப்பாக இந்த சாலையோர ஜூஸ் கடைகள், ரோஸ் மில்க், கரும்பு ஜூஸ் போன்றவைகள் அதிகம் காணப்படும் பட்சத்தில் இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு ஆய்வினை நடத்தியது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
Image Source: pexels
கோடைக்காலத்தில் கரும்பு சாறு விற்பனை அதிகமிருக்கும். ஆனால் இந்த கரும்பு சாறில் இயற்கையாக நிரம்பியுள்ள சர்க்கரை மனித உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கும் அபாயத்தினை கொண்டுள்ளதாம்.
Image Source: Samayam Tamil
கரும்பு சாறில் நிறைந்துள்ள சர்க்கரையை குளுக்கோஸாக மாற்ற அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படி குடிக்கும் பட்சத்தில், இதன் காரணமாக உடலில் குளுக்கோஸ் அளவும் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும்.
Image Source: pexels
குளுக்கோஸ் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும் காரணத்தினால் சர்க்கரை நோய், இன்சுலின் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
Image Source: pexels
கரும்பு சாற்றில் அதிகளவு கலோரிகள் உள்ளது. இதன் காரணமாக கரும்பு ஜூஸினை அதிகம் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
Image Source: pixabay
அடிக்கடி கரும்பு சாறு குடிப்பவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும் என்று நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
Image Source: pixabay
அதே சமயம், வெயிலுக்கு குளிர்பானங்களை வாங்கி குடிக்கும் வழக்கமும் நம்முள் பலருக்கு உண்டு. இதில் சேர்க்கப்படும் நிறம், மற்றும் நீண்டக்காலம் கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கலக்கப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு இது பெருமளவில் தீங்கு விளைவிக்கிறது.
Image Source: istock
எனவே அளவுடன் கரும்பு ஜூஸ்களை எடுத்துக்கொண்டு அதிலுள்ள நன்மைகளை பெறுங்கள். கோடைக்காலத்தில் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள பீட்ரூட், தர்பூசணி போன்ற உணவுகளை அதிகளவில் எடுத்து கொள்வது சிறந்தது.
Image Source: pixabay
Thanks For Reading!