[ad_1] அதிக செலவில் நடந்த பாலிவுட் பிரபலங்களின் திருமணங்கள்

அதிக செலவில் நடந்த பாலிவுட் பிரபலங்களின் திருமணங்கள்

Anoj, Samayam Tamil

Aug 10, 2024

தீபிகா - ரன்வீர் சிங்

தீபிகா - ரன்வீர் சிங்

இந்த ஜோடியின் திருமணம் இத்தாலியில் உள்ள lake como நகரில் மிகவும் பிரம்மாண்டாக நடைபெற்றது. பிறகு, மும்பை மற்றும் பெங்களூருவில் திருமண வரவேற்பு நடைபெற்றது. திருமண கொண்டாட்டத்திற்கான மொத்த செலவு ரூ.77 கோடி என கூறப்படுகிறது

Image Source: instagram-com/deepikapadukone

பிரியங்கா - நிக் ஜோனாஸ்

பிரியங்கா - நிக் தம்பதியின் திருமணம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில், இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் கலவையில் நடந்த இந்த திருமணத்தின் செலவு ரூ.3 கோடி என கணிக்கிடப்பட்டுள்ளது

Image Source: instagram-com/priyankachopra

அனுஷ்கா - விராட்

அனுஷ்கா - விராட் ஜோடியின் திருமணம் இத்தாலியில் Tuscany பகுதியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பிறகு, டெல்லி மற்றும் மும்பையில் திருமண வரவேற்பு நடைபெற்றது. திருமண கொண்டாட்டத்திற்கு ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்ததாக கூறப்படுகிறது

Image Source: instagram-com/virat-kohli

ஐஸ்வர்யா - அபிஷேக் பச்சன்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமணம், மும்பையில் உள்ள அமிதாப் பச்சன் வீட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்தில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். திருமணத்திற்கான செலவு ரூ.6 கோடி என்று கூறப்படுகிறது

Image Source: instagram-com/aishwaryaraibachchan_arb

ஷில்பா - ராஜ்

மகாராஷ்டிராவில் உள்ள கண்டாலா மலைப்பிரதேசத்தில் இந்த ஜோடியின் திருமணம் பாரம்பரிய முறைப்படி நடந்தது. பிறகு, மும்பையில் மிகவும் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நடைபெற்றது. திருமணத்திற்கான செலவு ரூ.5 கோடி ஆகும்

Image Source: instagram-com/theshilpashetty

சோனம் - ஆனந்த்

சோனம் - ஆனந்த் ஜோடியின் திருமணம் சீக்கிய முறைப்படி நவீன கொண்டாட்டத்துடன் மும்பையில் நடைபெற்றது. திருமணத்திற்கான செலவு ரூ.4 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது

Image Source: instagram-com/sonamkapoor

கரீனா - சைப்

கரீனா கபூர் மற்றும் சைப் அலி கான் ஜோடியின் திருமணம், மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடந்துள்ளது. இஸ்லாமிய மற்றும் இந்த முறைப்படி திருமண கொண்டாட்டங்கள் அரங்கேறியது. இதற்கு ரூ.10 கோடி செலவிட்டதாக கூறப்படுகிறது

Image Source: instagram-com/kareenakapoorkhan

ஜெனிலியா - ரிதேஷ்

நடிகை ஜெனிலியா - ரிதேஷ் திருமணம் மும்பையில் கிறிஸ்துவ மற்றும் மகாராஷ்டிரா முறைப்படி நடந்துள்ளது. அடுத்து, பாலிவுட் பிரபலங்களுக்காக பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு நடைபெற்றது. திருமண கொண்டாட்டத்திற்கு மொத்தமாக ரூ.8 கோடி செலவு செய்துள்ளனர்

Image Source: instagram-com/geneliad

சித்தார்த் - கியாரா திருமணம்

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணம், ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகார் அரண்மனையில் நடைபெற்றது. திருமணத்திற்கான செலவு ரூ.6 கோடி என கூறப்படுகிறது

Image Source: instagram-com/kiaraaliaadvani

Thanks For Reading!

Next: 2 கிராமத்தை தத்தெடுத்த 'மகேஷ் பாபு' பற்றிய சில ஆச்சர்ய தகவல்கள்!

[ad_2]