Jul 8, 2024
Wimbledon (விம்பிள்டன்) எனப்படுவது உலகின் பழமையான டென்னிஸ் போட்டிகளில் ஒன்றாகும். மேலும், டென்னிஸ் தொடர்களில் மதிப்புமிக்க ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது!
Image Source: x-com
டென்னிஸ் போட்டிகளின் மதிப்புமிக்க கோப்பையாக கருதப்படும் இந்த விம்பிள்டன் கோப்பையை சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 8 முறை (2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017) வென்று இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
Image Source: x-com
ரோஜர் பெடரர்-க்கு அடுத்தப்படியாக இந்த உயரிய பட்டத்தை செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 7 முறை (2011, 2014, 2015, 2018, 2019, 2021, 2022) வென்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
Image Source: x-com
90-களின் காலக்கட்டத்தில் டென்னிஸ் உலகை ஆண்ட வீரர் பீட் சாம்ப்ராஸ். அமெரிக்காவை சேர்ந்த இவர் 1993, 1994, 1995, 1997, 1998, 1999, 2000 ஆகிய ஆண்டுகளில் விம்பிள்டன் கோப்பையை வென்றுள்ளார்!
Image Source: x-com
1976, 1977, 1978, 1979, 1980 என தொடர்ந்து 5 ஆண்டுகள் விம்பிள்டன் கோப்பையை வென்று சாதனை படைத்தவர் ஜார்ன் போர்க். இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர்!
Image Source: x-com
ஜெர்மனி நாட்டை சேர்ந்த போரிஸ் பெக்கர் 1985, 1986 மற்றும் 1989 என மொத்தம் 3 ஆண்டுகளில் இந்த விம்பிள்டன் பட்டத்தை வென்று, இப்பட்டியலில் 5-ஆம் இடம் பிடிக்கிறார்!
Image Source: x-com
போரிஸ் பெக்கர்-க்கு முன்னதாக அமெரிக்க வீரர் ஜான் மெக்கன்ரோ; 1981, 1983 மற்றும் 1984-ஆம் ஆண்டு நடைப்பெற்ற விம்பிள்டன் தொடரில் கோப்பை வென்று போரிஸ் பெக்கர் உடன் தனது சாதனையை பகிர்ந்துக்கொள்கிறார்!
Image Source: x-com
பிரட்டனை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே 2013 மற்றும் 2016-ஆம் ஆண்டு இந்த விம்பிள்டன் பட்டத்தை வென்றார். இதேப்போன்று ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால் 2008, 2019-ஆம் ஆண்டு என 2 முறை விம்பிள்டன் பட்டம் வென்றார்!
Image Source: x-com
ஆஸி., நாட்டை சேர்ந்த ராட் லேவர் (1968, 1969), அமெரிக்காவை சேர்ந்த ஜிம்மி கானர்ஸ் (1974, 1982), ஆஸி., நாட்டை சேர்ந்த ஜான் நியூகோம்ப் (1970, 1971), ஸ்வீடனை சேர்ந்த ஸ்டீபன் எட்பெர்க் (1988, 1990) என பலரும் தலா 2 முறை விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளனர்!
Image Source: x-com
Thanks For Reading!