[ad_1] அதிக வயது வித்தியாசத்தில் 'திருமணம்' செய்வதன் நன்மைகளும், தீமைகளும்!

அதிக வயது வித்தியாசத்தில் 'திருமணம்' செய்வதன் நன்மைகளும், தீமைகளும்!

May 20, 2024

By: Anoj

வயது வித்தியாசத்தில் திருமணம்

சில நேரங்களில் கணவன் - மனைவி இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருக்கக்கூடும். அதற்கு, குடும்ப பின்னணி, கலாச்சார அழுத்தம் என பல காரணிகள் இருக்கக்கூடும். இப்படி வயது அதிகமாக இருப்பவரை திருமணம் செய்வதன் நன்மைகள் மற்றும் தீமைகளை இங்கு காணலாம்

Image Source: istock

நிதி நிலைத்தன்மை

வயது அதிகமான நபரை திருமணம் செய்கையில், நிதி ரீதியான பிரச்சனைகள் இருக்க செய்யாது. அவர் சிறு வயதிலே சம்பாதிக்க தொடங்குவதால், சம்பளம் தொடர்பான பிரச்சனைகள் இருக்காது

Image Source: pexels-com

முதிர்ச்சி

வயது அதிகமான நபர், வாழ்வில் பல்வேறு விஷயங்களை பார்த்திருப்பதால், கடினமான சூழ்நிலைகளை அசால்ட்டாக கையாள செய்வார்கள். உறவில் வரக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதிலும் மிகவும் பக்குவமாக நடந்துகொள்வார்கள்

Image Source: pexels-com

வெவ்வேறு கண்ணோட்டம்

கணவன் - மனைவி வெவ்வேறு காலக்கட்டத்தில் வளர்ந்திருக்கும் பட்சத்தில், இருவரது கண்ணோட்டமும் வித்தியாசமாக இருக்கக்கூடும். ஒரு விஷயத்தை கையாளுகையில் புதிய சிந்தனைகளும், தீர்வுகளும் கிடைக்கக்கூடும்

Image Source: istock

குழந்தை பெறுவதில் சிக்கல்

வயது அதிகரிக்கும் போது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைய தொடங்கக்கூடும். குறிப்பாக, கருவுறுதலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. விந்தணுக்களின் தரம் வயது அதிகரிக்கும் போது குறைய தொடங்கலாம்

Image Source: istock

உறவில் சலிப்பு வரலாம்

வயது அதிகமான பார்ட்னர் தன்னை ஒரு பொறுப்பானவராக கருதிக்கொண்டு, வயது குறைவான நபரை குழந்தை போல் கவனித்துவரலாம். கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான தொந்தரவு உறவில் சலிப்பை உண்டாக்கலாம்

Image Source: pexels-com

விவாகரத்துக்கு வாய்ப்பு

வயது வித்தியாசம் காரணமாக கருத்துக்கள் மற்றும் கண்ணோட்டங்களில் ஏற்படும் வேறுபாடு, காலப்போக்கில் உறவை கசப்பானதாக மாற்றக்கூடும். ஒரு கட்டத்தில் விவாகரத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது

Image Source: pexels-com

நண்பர்கள் வட்டமும் மாறுபடும்

வயது வித்தியாசம் கொண்ட தம்பதியின் நட்பு வட்டாரமும் வித்தியாசமாக இருக்கக்கூடும். அதேபோல், வயது அதிகமான நபரிடம் எதிர்பார்த்த ரொமான்ஸ் இல்லாமல் போகலாம்

Image Source: pexels-com

என்ன செய்யலாம்?

முதலில் வயது வித்தியாசத்தை இருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உறவில் வரும் வாக்குவாதங்களை தீர்க்க திறந்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும். இருவருக்கும் பிடித்தமான விருப்பங்களை கண்டறிய வேண்டும்

Image Source: istock

Thanks For Reading!

Next: உங்கள் குழந்தைகளை சமூகத்துடன் ஒன்றிணைப்பது எப்படி?

[ad_2]