May 10, 2024
அட்சய திருதி தினத்தில் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை பெருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடும் நிலையில், அந்த ஒரு சில பொருட்கள் பற்றி இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
நகை, பாத்திரம் என சில்வர் பொருட்களை இந்தி அட்சய திருதி தினத்தன்று வாங்குவது வீட்டில் உள்ளவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவுவதோடு, செல்வ வரவுக்கும் வழிவகுக்கும்.
Image Source: istock
அட்சய திருதி தினத்தில் வாகனங்களை வாங்குவது நீண்ட ஆயுளுக்கும், எதிர்கால முன்னேற்றத்திற்கும் உதவும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
அட்சய திருதி தினத்தில் புத்தாடை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது, வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை அழைத்து வருவதற்கு சமம். மேலும், வீட்டில் உள்ளவர்களின் மகிழ்ச்சிக்கும் இது உதவியாக இருக்கும்.
Image Source: istock
அட்சய திருதி தினத்தில் புத்தகங்களை வாங்குவது சுய ஒழுக்கம் மற்றும் சுய முன்னேற்றத்திற்கு உதவும். மேலும், சரஸ்வதி தேவியின் ஆசிர்வாதத்தையும் இது பெற்று தரும்.
Image Source: pexels-com
எஃகு, தாமிரம், பித்தளையால் உண்டாக்கப்பட்ட பாத்திரங்கைள இந்த அட்சய திருதி தினத்தில் வாங்குவது வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் காப்பதோடு, வீட்டிற்கு நல்ல செய்தி அழைத்து வருவதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
Image Source: istock
அட்சய திருதி தினத்தில் பாரம்பரியம் மிக்க மண்பாண்டங்களை (குறிப்பாக தானியங்களை சேகரித்து வைக்கும் பானை, குடவை போன்றவற்றை) வாங்கி வருவது, செல்வ வரவுக்கு வழிவகுக்கும்.
Image Source: istock
அட்சய திருதியை அன்று தங்க நகை வாங்குவது, செல்வம் மற்றும் சொத்துங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
Image Source: istock
வீடு, மனை போன்ற சொத்துகளை இந்த அட்சய திருதியை அன்று வாங்குவது, வீட்டில் உள்ளவர்களின் நலன் மற்றும் மன அமைதிக்கு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
Image Source: istock
Thanks For Reading!