Jul 6, 2024
பதப்படுத்தப்பட்ட மாமிசம் எனப்படுவது இரசாயனப் பொருட்களின் உதவியுடன் பாதுகாக்கப்படும் (பதப்படுத்தப்படும்) இறைச்சி வகைகள் ஆகும்.
Image Source: istock
மாமிசங்களின் இயற்கை பண்புகளை மாற்றும் இந்த பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளின் நுகர்வு மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் பல நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என கூறப்படும் நிலையில் இதன் உண்மை நிலை குறித்து இங்கு காணலாம்!
Image Source: pexels-com
நிபுணர்கள் கூற்றுப்படி இறைச்சிகளை பதப்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களில் புற்றுநோயின் வாய்ப்புகளை அதிகரிக்கும் பொருட்களை கொண்டுள்ளது. இதன் விளைவாக பெருங்குடல், மலக்குடல் சார்ந்த புற்றுநோயின் வாய்ப்பு அதிகரிக்க கூடும் என நம்பப்படுகிறது!
Image Source: istock
இறைச்சிகளை பதப்படுத்த பயன்படுத்தப்படும் மூன்று இரசாயனங்கள் புற்றுநோயின் வாய்ப்பை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக இறைச்சிகளை நீண்ட நாட்களுக்கு புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும் Nitrates புற்றுநோயை உண்டாக்கும் மிக முக்கிய வேதிப் பொருளாக உள்ளது.
Image Source: istock
இறைச்சிகளை பப்படுத்த பயன்படும் இந்த வேதிப் பொருட்கள் அனைத்தும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதியில் உள்ள உடல் செல்களை சேதம் செய்து, புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது!
Image Source: istock
ஆய்வாளர்கள் கூற்றுபடி இந்த வேதிப்பொருட்களின் பயன்பாடு ஆனது புற்றுநோயின் வாய்ப்பை மட்டும் அதிகரிப்பது இல்லை, இதயம் சார்ந்த ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் நீரிழிவு அபாயத்தையும் அதிகரிக்க கூடும்!
Image Source: istock
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளின் நுகர்வால் உண்டாகும் இந்த புற்றுநோய் உள்ளிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்க்க, இந்த ஆரோக்கியமற்ற இறைச்சிகளை முடிந்தளவுக்கு தவிர்ப்பதே நல்லது!
Image Source: istock
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை வாங்கும் போது, அதன் ingredient பட்டியலை கவனியுங்கள். அதில் nitrate, nitrite, cured அல்லது salted போன்ற வார்த்தைகளை கண்டால், அவற்றை தவிர்ப்பது நல்லது!
Image Source: istock
இறைச்சியை பதப்படுத்த உதவும் வேதிப்பொருட்களில் ஒன்றான Heme எனும் நிறமி, இறக்கையாகவே ஒரு சில சிவப்பு இறைச்சிகளில் காணப்படும் நிலையில், இந்த சிவப்பு இறைச்சிகளின் நுகர்வை முடிந்தளவுக்கு குறைத்துக்கொள்வது புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்!
Image Source: istock
Thanks For Reading!