[ad_1] அமிதாப் பச்சன் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

அமிதாப் பச்சன் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

mukesh M, Samayam Tamil

Jul 25, 2024

அமிதாப் பச்சன்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் குறித்து பலரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு நாம் காணலாம்!

Image Source: x-com/srbachchan

நடிப்பில் ஆர்வம் இல்லை!

நடிப்பில் ஆர்வம் இல்லை!

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் வளர்ந்து நிற்கும் அமிதாப் பச்சனுக்கு திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் இல்லை. பொறியியல் துறையில் பட்டம் பெற்று ‘இந்திய விமானப்படையில்’ இணைய வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது!

Image Source: x-com/srbachchan

தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர்!

நடிகர் அமிதாப் பச்சன் அவரது தனித்துவமான ‘கனத்த’ குரலுக்கு சொந்தக்காரர். படிக்கும் காலத்தில் All India Radio-ல் இணைய விரும்பிய அமிதாப் பச்சனுக்கு அவரது குரலே ஒரு தடையாக இருந்தது!

Image Source: x-com/srbachchan

குரல் நடிகராக அறிமுகம்!

திரையில் நடிகராக நடிப்பதற்கு முன் குரல் நடிகராக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானகவர் அமிதாப் பச்சன். 1969-ஆம் ஆண்டு வெளியான புவன் ஷோம் எனும் திரைப்படத்தில் அவர் குரல் நடிகராக தனது திரையுலக பயணத்தை துவங்கினார்.

Image Source: x-com/srbachchan

நடிகராக முதல் திரைப்படம்?

குரல் நடிகராக தனது பயணத்தை துவங்கிய அமிதாப்; நடிகராக அறிமுகமான முதல் திரைப்படம் சாத் ஹிந்துஸ்தானி. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றார்!

Image Source: x-com/srbachchan

முதல் சம்பளம்!

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கும் அமிதாப் பச்சனின் முதல் சம்பளம் 300 ரூபாய். திரைத்துரையில் சாதிக்க வேண்டி பல்வேறு கஷ்டங்களை சந்தித்துள்ளார்!

Image Source: x-com/srbachchan

தொடர் தோல்வி படங்கள்!

அமிதாப் பச்சன் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த ஒரு திரைப்படம் ஜன்ஜீர் (1972). இத்திரைப்படத்திற்கு முன் தொடர்ந்து 12 தோல்வி படங்களை கொடுத்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

Image Source: x-com/srbachchan

இருகைப்பழக்கம் கொண்டவர்!

நடிகர் அமிதாப் பச்சன் ambidexterity எனும் இருகைப்பழக்கம் கொண்டவர். அதாவது, வலது - இடது என இரண்டு கைகளையும் சரிசமாக பயன்படுத்தும் (இரு கைகளிலும் எழுதுவது போன்ற) பழக்கம் கொண்டவர்!

Image Source: x-com/srbachchan

அதிக இரட்டை வேட படங்கள்!

டான் (1978),The Great Gambler (1979), தேஷ் பிரேமி (1982), பிம்சால் (1982) என 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ளார். மகான் (1983) திரைப்படத்தில் இவர் மூன்று வேடம் ஏற்று நடித்தது குறிப்பிடத்தக்கது!

Image Source: x-com/srbachchan

Thanks For Reading!

Next: நடிகர் 'விஜய் ஆண்டனி' பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

[ad_2]