[ad_1] அமெரிக்காவின் Statue of Liberty தொடர்பான சில சுவாரசிய தகவல்கள்!

Jun 10, 2024

அமெரிக்காவின் Statue of Liberty தொடர்பான சில சுவாரசிய தகவல்கள்!

mukesh M

Statue of Liberty

சுதந்திர தேவி சிலை (Statue of Liberty) எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். உலக புகழ் பெற்ற இந்த சிலை பற்றி பலரும் அறிந்திராத சில அரிய தகவல்களை இங்கு நாம் காணலாம்!

Image Source: pexels-com

போர்க்கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது

இந்த சுதந்திர தேவி சிலை ஜூலை மாதம் 1884 ஆம் ஆண்டு பிரான்சில் கட்டி முடிக்கப்பட்டு 1885-ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி பிரஞ்சு துறைமுகத்திற்கு போர்க்கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது.

Image Source: pexels-com

350 துண்டுகள்

இந்த சுதந்திர தேவி சிலை; மொத்தம் 350 துண்டுகளாக பிரிக்கப்பட்டு 214 பெட்டிகளில் வைத்து கொண்டுவரப்பட்டது. பிறகு இந்த பாகங்களை மீண்டும் ஒன்றிணைக்க 4 மாதங்கள் வரை ஆனதாக கூறப்படுகிறது!

Image Source: pexels-com

ரோமன் கடவுள்

இந்த சுதந்திர தேவி சிலை ஒரு ரோமன் பெண் கடவுளின் அடையாளத்தை வைத்து உருவாக்கப்பட்டது. ஜூலியஸ் சீசர் காலத்தில் ரோமன் நாட்டு நாணயங்களிலும் இது அச்சடிக்கப்பட்டது.

Image Source: pexels-com

ஏழு கடல்

இந்த சுதந்திர தேவி சிலையின் தலையில் இருக்கும் கிரீடம் ஏழு கடல்களையும் ஏழு கண்டங்களையும் குறிப்பிடுவதாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

Image Source: pexels-com

அமைதியின் அடையாளம்!

இந்த லிபர்ட்டி சிலை அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து வந்தவர்களின் நம்பிக்கைக்காகவும் அமெரிக்காவில் அமைதியான வாழ்வு கிடைக்கும் என்பதை எடுத்து சொல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

Image Source: pexels-com

46 மீட்டர் உயரம்!

கை - தலை என உடலின் தனித்தனி பாகங்கள் உருவாக்கப்பட்ட இந்த சுதந்திர தேவி சிலை சுமார் 46 மீட்டர் உயரம் கொண்டது. இந்த சிலையை செய்வதற்கு பிரான்சிலிருந்து இலட்சக்கணக்கான மக்களின் உதவி பெறப்பட்டுள்ளது.

Image Source: pexels-com

மரத்துண்டுகள்

முதலில் இந்த லிபர்ட்டி சிலை மரத்துண்டுகளில் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு இரும்பு பிரேம் பயன்படுத்தி தற்போது உள்ள நிலைக்கு கொண்டுவரப்பட்டது!

Image Source: pexels-com

சுதந்திரத்தின் அடையாளம்

இந்த லிபர்ட்டி சிலை சுதந்திரத்தின் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. இந்த சிலை பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் வாழும் மக்களின் நட்பை பாராட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய Wildlife Safaris!

[ad_2]