Aug 9, 2024
தற்போதைய காலக்கட்டத்தில் 30 வயதை தாண்டினாலே நரை முடி வர துவங்கி விடுகிறது. எனவே பலராலும் டை அடிக்காமல் வெளியே செல்ல தயக்கம் ஏற்படுகிறது என்பதால் சந்தைகளில் கிடைக்கும் ஹேர் டை-களை பயன்படுத்துகிறார்கள். இது பாதுகாப்பானது தானா என்பதை தான் இப்பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
Image Source: istock
ஹேர் டை என்பது தவிர்க்க முடியாத ஓர் விஷயமாக மாறிய நிலையில், அதனை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, எது நமது முடிக்கு பாதுகாப்பானது என்பது குறித்த விழிப்புணர்வு ஏதும் மக்கள் மத்தியில் இல்லை என்று கூறுகிறார் சருமநல மருத்துவர்.
Image Source: istock
அமோனியா ஃபிரீ ஹேர் டை பயன்படுத்துவது என்பது பாதுகாப்பானது தான் என்று தற்போது பலருக்கும் தெரிகிறது. ஆனால் அதே சமயம் அது பிபிடி ஃபிரீ ஹேர் டையாக இருக்க வேண்டும் என்பதும் அவசியம் என்று அறிவுறுத்துகிறார் அந்த மருத்துவர்.
Image Source: istock
பாரா பினலைன் டயாமின் என்பதன் சுருக்கமே இந்த பிபிடி, இது சாலைகளை போட பயன்படுத்தும் தார் தயாரிப்பில் சேர்க்கக்கூடியதாம். இதனால் நாம் டையாக தலையில் தடவும் பொழுது அதிலிருக்கும் கருப்பு நிறம் முடியில் ஒட்டிக்கொள்கிறது. இதன் காரணமாகவே இப்பொருளை ஹேர் டையில் சேர்க்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
Image Source: istock
இந்நிலையில் இந்த கெமிக்கல் கலந்த ஹேர் டையை தலைக்கு அடிக்கடி பயன்படுத்தும் பட்சத்தில் இது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே இனி ஹேர் டை வாங்கி பயன்படுத்துவதற்கு முன்னர் இதனையெல்லாம் கவனித்து பயன்படுத்துங்கள்.
Image Source: istock
ஹேர் டை பயன்படுத்தினால் அது சற்று அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும் என்பது உண்மை தான். முதலில் தலையில் அரிப்பில் துவங்கும் இந்த அலர்ஜி தொடர் பயன்பாடு காரணமாக தலைப்பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும். இது சகஜம் என்று மக்கள் நினைப்பது தவறு என்கிறார்கள் மருத்துவர்கள்.
Image Source: istock
எனவே இனி உஷாராக ஹேர் டையை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். அப்படி இல்லையெனில் மெடிக்கல் கிரேடு ஹேர் டை கிடைக்கிறதாம், அதனை மருத்துவரை அணுகி பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது.
Image Source: istock
மற்ற ஹேர் டைகள் கெமிக்கல் என்பதால் பலரும் பிளாக் ஹென்னாவை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், இதில் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே முடிக்கு ஆரஞ்சு நிறம் கிடைக்கிறது. இதுவும் ஆபத்து தான்.
Image Source: istock
ஹேர் டை என்பது தவிர்க்க முடியாத ஓர் விஷயமாக மாறிய நிலையில், அதனை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, எது நமது முடிக்கு பாதுகாப்பானது என்பது குறித்த விழிப்புணர்வு ஏதும் மக்கள் மத்தியில் இல்லை என்று கூறுகிறார் சருமநல மருத்துவர்.
Image Source: pexels
Thanks For Reading!