[ad_1] அம்மான் பச்சரிசி கீரையின் நன்மைகள் தெரிந்து கொள்ளலாம்

Jul 24, 2024

அம்மான் பச்சரிசி கீரையின் நன்மைகள் தெரிந்து கொள்ளலாம்

Nivetha

அம்மான் பச்சரிசி கீரை

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் மருத்துவ முறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் கீரை வகைகளுள் அம்மான் பச்சரிசி கீரையும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.

Image Source: pxels

சுவை

'சித்திரவல்லாதி' என்றும் அழைக்கப்படும் இக்கீரை, துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது. இந்த கீரை சாலையோரங்களில் மற்றும் தரிசு நிலங்களில் அதிகளவு வளரக்கூடியது. இதனை பண்டைய காலத்திலிருந்தே மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இதன் நன்மைகளை இப்பதிவில் காண்போம் வாருங்கள்.

Image Source: pexels

ஊட்டச்சத்துக்கள்

அம்மான் பச்சரிசி கீரையில் வைட்டமின்கள் ஏ, சி, இ, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புசத்து, பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Image Source: pexels

தொற்று நோய்கள்

இந்த கீரையிலுள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்டுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சளி, இருமல் போன்ற தொற்று நோய் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இக்கீரை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

Image Source: pexels

மலசிக்கல்

இந்த கீரையில் ஆன்டி ஆக்சிடெண்ட் பண்புகள் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இந்த கீரையில் நிறைந்துள்ள அதிகளவு நார்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.

Image Source: istock

மாதவிடாய்

பெண்கள் தங்கள் மாதவிடாய் நேரத்தில் அதிகளவு வலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த கீரையை தங்களது உணவிலோ ஆயுர்வேத மருந்தாகவோ எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், மாதவிடாய் காரணமாக ஏற்படும் வலி, அதிக உதிரப்போக்கு உள்ளிட்டவை குணமாகும்.

Image Source: istock

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்

கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புசத்து அதிகம் தேவைப்படும், மருத்துவர்களும் அதற்கான மாத்திரைகளை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிகளவு பால் சுரக்க இக்கீரை உதவுகிறது.

Image Source: istock

சரும ஆரோக்கியம்

அம்மான் பச்சரிசி கீரையில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டி ஆக்சிடெண்ட்டுக்கள் உள்ளன. இது வயதான தோற்றம் பெறுவதை தடுப்பதோடு, முகப்பருக்கள் மற்றும் சரும நோய்கள் ஏற்படுவதை தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது.

Image Source: istock

முடி வளர்ச்சி

இந்த கீரையை அரைத்து தலையில் தடவினால் முடி வளர்ச்சி தூண்டப்படுவதோடு, பொடுகு பிரச்சனையையும் போக்குகிறது. அதே போல் மன அழுத்தமுள்ள நபர்கள் இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் அதிலுள்ள மூலிகை சேர்மங்கள் மன அழுத்தத்தை குறைப்பதோடு, மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.

Image Source: Samayam Tamil

Thanks For Reading!

Next: நோய்களை குணப்படுத்தும் கொய்யா இலைகள்

[ad_2]