May 17, 2024
பொதுவாகவே தென்னிந்திய சினிமாவில் அரசியல் கதைக்களத்தில் அமையும் திரைப்படங்கள் சுவாரஸ்யமாக அமைவது கடினம் தான். இந்நிலையில், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற சில அரசியல் திரைப்படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Image Source: instagram-com
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் மாலிக். இது ஒரு அரசியல் திரில்லர் திரைப்படம்.
Image Source: instagram-com
மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா. இந்தத் திரைப்படத்தில் தேர்தலில் நடக்கும் சாதி அரசியலை பற்றி பேசியுள்ளனர்.
Image Source: instagram-com
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர கொண்டா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் நோட்டா. ஒரு இளம் வீடியோ கேம் வடிவமைப்பாளர் அரசியலில் கால் பதிப்பது இந்த திரைப்படத்தின் கதைகளம்.
Image Source: instagram-com
தெலுங்கு பிரபல நடிகர் ராணா டகுபதி மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் நேனே ராஜா நேனே மந்திரி. அரசியல் உலகில் நடக்கும் சுவாரசியங்கள், நாடகம், ஊழல் போன்றவை இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Image Source: instagram-com
2016-ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான ஒரு அரசியல் நையாண்டி திரைப்படம். மனதளவில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தன்னை நாட்டின் ஜனாதிபதியாக பாவித்து, சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுவதே இத்திரைபம்படத்தின் திரைக்கதை!
Image Source: instagram-com
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒரு மெக்ஸிகன் அபராதா. இந்த மலையாள திரைப்படம் மாணவர்கள் மத்தியில் நடக்கும் அரசியல் காட்சிகளை மையமாகக் கொண்டுள்ளது.
Image Source: instagram-com
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லூசிபர். இந்த அரசியல் ஆக்சன் திரைப்படம் அதிக வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
Image Source: instagram-com
பிரபல மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் யாத்ரா. இந்திய அரசியல்வாதி ஒருவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 900 மைல் நடைபயணத்தை மேற்கொள்வது தான் இந்த படத்தின் கதைகளம்.
Image Source: instagram-com
Thanks For Reading!