Jun 5, 2024
இந்திய கிரிக்கெட் அணிக்கு குறிப்பிடத்தக்க பங்களித்து பின் அரசியலில் கால் பதித்த வீரர்கள் சிலரை குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய அதிரடி ஆட்டக்காரர் மனோஜ் திவாரி. தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தீவிரமாக அரசியல் செய்து வருகிறார்.
Image Source: twitter-com
உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய உருப்பினராக இருந்தவர் கௌதம் கம்பீர். தனது கிரிக்கெட் பயணத்திற்கு பின் BJP கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினாரக பதவியேற்றார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான வீரர் நவ்ஜோத் சிங் சித்து. தனது கிரிக்கெட் பயணத்திற்கு பின் BJP-ல் இணைந்த இவர், பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டர் முகமது அசாருதீன், தனது கிரிக்கெட் பயணத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் MP-யாகவும் பதவி வகித்தார்.
Image Source: twitter-com
1983-ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்தவர் கீர்த்தி ஆசாத். கிரிக்கெட் பயணத்திற்கு பின் BJP-ல் இணைந்த இவர், பின் காங்கிரஸ் சென்று தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.
Image Source: twitter-com
சேத்தன் பிரதாப் சிங் சவுகான் - இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மட்டையாளர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் BJP கட்சியில் இணைந்த இவர் அக்கட்சியின் சார்பாக மக்களவை சென்றுள்ளார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பீல்டர் மற்றும் மட்டையாளர் முகம்மது கைஃப். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்; இருப்பினும் தற்போது அரசியலில் அதிகம் ஆர்வம் வெளிப்படுத்தாமல் இருக்கிறார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் குறிப்பிடத்தக்க ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் யூசப் பதான். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் சார்பாக பாராளுமன்றம் செல்கிறார்!
Image Source: instagram-com
Thanks For Reading!