[ad_1] அரசியல்வாதிகளாக மாறிய 8 IIT பட்டதாரிகள்!

Jul 22, 2024

அரசியல்வாதிகளாக மாறிய 8 IIT பட்டதாரிகள்!

Pavithra

IIT பட்டதாரிகள்

இந்தியாவின் மதிப்புமிக்க தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான IIT-ல் பட்டம் பெற்றும், அரசியல் மீதுள்ள ஆர்வத்தால் அரசியல்வாதிகளாக மாறிய சிறந்த 8 IIT பட்டதாரிகளைப் பார்ப்போம்.

Image Source: twitter-com

மனோகர் பாரிக்கர்

IIT பாம்பேவின் முன்னாள் மாணவரான இவர் கோவாவின் முதலமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்குப் பெயர் பெற்றவர்.

Image Source: twitter-com

ஜெயந்த் சின்ஹா

IIT டெல்லி பட்டதாரியான ஜார்கண்டை சேர்ந்த இவர் முன்னாள் மத்திய அமைச்சராக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

Image Source: twitter-com

ஜெய்ராம் ரமேஷ்

IIT பாம்பேவில் பட்டம் பெற்ற இவர் இந்தியத் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஆவார். மேலும் அமைச்சராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

Image Source: twitter-com

அஜித் சிங்

உத்திர பிரதேசத்தின் ராஷ்ட்ரீய லோக்தள கட்சியின் நிறுவனரும் தலைவருமான இவர் IIT காரக்பூரில் படித்தவர். பல்வேறு துறை அமைச்சராகவும், ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

Image Source: twitter-com

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியின் முதலமைச்சராகவும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் IIT காரக்பூரில் படித்தவர்.

Image Source: twitter-com

ஜிதேந்திர சிங்

IIT காரக்பூரில் படித்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தற்போதைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் மாநில அமைச்சர் ஆவார்.

Image Source: twitter-com

அலோக் அகர்வால்

IIT கான்பூரில் படித்த சமூக செயற்பாட்டாளரான இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும், மத்தியப் பிரதேசத்தின் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

Image Source: twitter-com

சுதீந்திர குல்கர்னி!

IIT பாம்பேவில் உலோகவியல் பொறியியல் படிப்பை படித்தவர் சுதீந்திர குல்கர்னி. தனது அரசியல் பயணத்தில் பெரும்பகுதியை பாஜக கட்சியுடன் கழித்த மூத்த அரசியல் தலைவர்!

Image Source: twitter-com

Thanks For Reading!

Next: சமஸ்கிருதத்தில் இருந்து உருவான ஆங்கில வார்த்தைகள்!

[ad_2]