[ad_1] ​அரிசி பொரி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Jun 19, 2024

​அரிசி பொரி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Nivetha

​அரிசி பொரி

அரிசி பொரி மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உணவு பொருள். ஆனால் இதில் மறைந்துள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள் ஏராளமானவை.

Image Source: pixabay

​கொழுப்பு சத்து

அரிசி பொரியில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. எனவே இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளோருக்கு ஏற்ற உணவு.

Image Source: pixabay

​விரைவான ஆற்றல்

இந்த அரிசி பொரியில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளதாம். அதனால் இதனை சாப்பிட்டால் விரைவான ஆற்றலை கிடைக்கும். ஆற்றல் அதிகம் தேவைப்படும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டி உணவாக அமையும்.

Image Source: pexels

​செரிமானம்

இதில் அதிகளவு நார்சத்து நிரம்பியுள்ளதால் செரிமான பிரச்சனைகளை தீர்ப்பதோடு விரைவில் செரிமானமாகவும் உதவுகிறது.

Image Source: istock

​அலர்ஜி

சிலருக்கு க்ளூட்டன் கொண்ட உணவு வகைகள் உடலிற்கு பல்வேறு தொந்தரவுகளை அளிக்கும். அப்படிப்பட்ட நபர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு.

Image Source: pixabay

​கலோரிகள்

அரிசி பொரியில் கலோரிகள் மிக குறைவு. இதனால் இது உடல் எடையினை சீராக வைத்திருக்க உதவுகிறது.

Image Source: pexels

குழந்தைகளுக்கான ஸ்நேக்ஸ்

பஃப்டு ரைஸ் என்றும் கூறப்படும் இந்த அரிசி பொரி மொறுமொறுப்பான சுவையினை கொண்டுள்ளதால் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு இது ஆரோக்கியமான ஸ்நேக்ஸாக அமையும்.

Image Source: Samayam Tamil

​உணவு வகைகள்

அரிசி பொரியினை காலையில் செய்யக்கூடிய உணவு தானியங்களில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். அரிசி கேக் என கூறப்படும் சமையல் வகைகளிலும் பயன்படுத்தலாம்.

Image Source: pixabay

​அவசர உலகம்

தற்போதைய அவசர உலகத்தில் உடலுக்கு அதிகளவு தீங்குகளை விளைவிக்கும் ஜங்க் ஃபுட்ஸ்களையே விரும்பி சாப்பிடுகிறோம். இதற்கு மாற்றாக இது போன்ற சத்தான பாரம்பரிய உணவு வகைகளை உணவுகளில் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.

Image Source: pexels

Thanks For Reading!

Next: எந்ததெந்த நேரத்தில் தயிர் சாப்பிட்டால் என்ன பயன் ? - பார்ப்போம் வாருங்கள்

[ad_2]