May 27, 2024
வாய்வு, வயிற்று உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் உருளைகிழங்கு பிரன்ச் பிரைஸ்-க்கு மாற்றாக, அரிசி மாவு பயன்படுத்தி பிரன்ச் பிரைஸ் செய்வது எப்படி என இங்கு காணலாம்.
Image Source: istock
அரிசி மாவு - 2 கப் | மஞ்சள் பொடி - ¼ ஸ்பூன் | எள் - 1 ஸ்பூன் | மிளகாய் பொடி - 2 ஸ்பூன் | கறிவேப்பிலை, கொத்தமல்லி - 1 கொத்து | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட அரிசி மாவினை ஒரு சல்லடை கொண்டு சலித்து - தூசி நீக்கி சுத்தம் செய்து தயாராக எடுத்துக்கொள்ளவும்.
Image Source: pexels-com
தொடர்ந்து எடுத்துக்கொண்ட கறிவேப்பிலை, கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கி தனியே தயாராக எடுத்துக்கொள்ளவும்.
Image Source: istock
தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் 1 கப் அளவு தண்ணீருடன் மஞ்சள், எள், மிளகாய் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
Image Source: istock
இச்சேர்மம் நன்கு கொதிக்கும் நிலையில் அடுப்பை அரை வெப்பநிலைக்கு மாற்றவும். தொடர்ந்து தயாராக உள்ள அரிசி மாவு மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கி பதமான சூட்டிற்கு ஆற விடவும்.
Image Source: istock
பின் மாவை பதமாக பிசைந்து, ரொட்டி உருட்டுவது போன்று உருட்டி பின், பிரென்ச் பிரைஸ் வடிவில் சிறு சிறு துண்டுகாள கத்தியை பயன்படுத்தி வெட்டிக்கொள்ளவும்.
Image Source: istock
இதனிடையே அடுப்பில் கடாய் ஒன்றினை வைத்து அதில் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
Image Source: istock
எண்ணெய் நன்கு கொதிக்கும் நிலையில் தயாராக நறுக்கி வைத்த அரிசி மாவு துண்டுகளை சேர்த்து பதமாக பொரித்து எடுக்க அரிசி மாசவு பிரஸ் ரெடி!
Image Source: istock
Thanks For Reading!