[ad_1] அறிவாற்றல் அதிகம் கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

Aug 3, 2024

அறிவாற்றல் அதிகம் கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

mukesh M

அளவுக்கு மிகுதியான IQ அளவு என்றால்?

பொதுவாக, உயர் IQ என்பது நீங்கள் வலுவான அறிவாற்றல் திறன்களைக் கொண்டிருப்பதை காட்டும். இப்படிப்பட்டவர்கள் சக நபர்களிடம் இருந்து சற்றே வித்தியாசமாக குணநலன்களை பெற்றிருப்பார்கள். இயல்பை விட அதிகமான அறிவாற்றலை கொண்டிருக்கும் நபர்களிடம் காணப்படும் அறிகுறிகள் பற்றி இங்கு காணலாம்!

Image Source: unsplash-com

தனக்குத்தானே பேசிக்கொள்வது!

நாம் சில நேரங்களில் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் நபர்களை கண்டு அவர்களை மனநலன் பாதிக்கப்பட்டவர் என அடையாளப்படுத்துவோம். ஆனால் அதிக அறிவாற்றலை கொண்டிருப்பவர்ளும் தங்கள் எண்ணங்களை ஒழுங்கமைக்கவும், கருத்துகளை நன்றாக புரிந்து கொள்ளவும் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

Image Source: unsplash-com

விமர்சன சிந்தனை!

அதிக அறிவாற்றல் கொண்ட நபர்களுக்கு இயற்கையாகவே விமர்சன சிந்தனை என்பது இருக்கும். எதையும் பகுத்தறியும் திறன், புதிய விஷயங்களை தெரிந்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

Image Source: unsplash-com

குழப்பமான சூழல்!

குழப்பமான சூழல் அறிவாற்றல் கொண்டவர்களுக்கு யோசனை வழங்கும் இடமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கிறது. மற்றவர்கள் சிந்திக்க அமைதியான இடங்களை நாடும் நிலையில் இவர்கள் எத்தகைய குழப்பமான சூழலையும் சமாளித்து சிந்திப்பார்கள்.

Image Source: unsplash-com

இரவு விழித்திருப்பது!

ஆந்தைப் போல சிலர் இரவில் மட்டும் தான் பணியாற்றுவார்கள். அவர்கள் அறிவுத்திறன் மற்றவர்களை விட அதிகமாக இருக்கும். இதனால் நடு இரவு, விடியற்காலை வேலை செய்ய சிறந்த நேரமாக பார்க்கப்படுகிறது.

Image Source: istock

தொடர்ந்து கேள்வி கேட்பது!

நீங்கள் ஏன், எப்படி என ஒவ்வொரு விஷயத்திலும் கேள்வி கேட்கிறீர்கள் என்றால் அது புத்திசாலிதனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்.

Image Source: unsplash-com

வாசிப்பு பழக்கம்!

அதிக அறிவைப் பெறுவதற்கும், புதிய வார்த்தைகளை உருவாக்குவதற்கும் வாசிப்பு பழக்கம் என்பது மிக முக்கியமானது. இவர்கள் அறிவியல், வரலாறு, இலக்கியம் தொடர்பான புத்தகங்களை அதிகம் வாசிப்பதாக ஆய்வுகள் சொல்கிறது.

Image Source: pexels-com

தனிமையை அனுபவிப்பது!

அதிக அறிவாற்றல் கொண்டவர்கள் தனிமை விரும்பியாக இருப்பார்கள். தங்களது சொந்த எண்ணங்களில் அதிக நம்பிக்கையுடன் இருப்பதால் தனிமையில் அதிக நேரம் செலவிடுவார்கள்.

Image Source: unsplash-com

சவாலுக்கு தயாராவது!

புதிர்கள் மற்றும் சவாலான பயிற்சிகளை மேற்கொள்வதில் அதிக அறிவாற்றல் கொண்டவர்கள் எப்போதும் ஆர்வமுடன் இருப்பார்கள். இதுபோன்ற சவால்கள் மூளையை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவும் என்பது முக்கியமானது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: “களரி முதல் கட்கா வரை”: இந்தியாவின் பாரம்பரிய தற்காப்புக் கலைகள்!

[ad_2]