[ad_1] அறுவை சிகிச்சை முதல் சித்த மருத்துவம் வரை: மருத்துவ துறையில் இந்தியாவின் பங்களிப்பு!

Jun 22, 2024

அறுவை சிகிச்சை முதல் சித்த மருத்துவம் வரை: மருத்துவ துறையில் இந்தியாவின் பங்களிப்பு!

Pavithra

மருத்துவ முன்னோடிகள்

இந்தியா நீண்ட மருத்துவ பாரம்பரியத்தைக் கொண்ட நாடு. மருத்துவத்தின் பல்வேறு துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகளை வழங்கியுள்ளது. அவற்றுள் முதன்மையான சில பங்களிப்புகளை பார்ப்போம்.

Image Source: istock

ஆயுர்வேதம்

உலகின் மிகப் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாக ஆயுர்வேதம் கருதப்படுகிறது. இயற்கை மருத்துவத்தின் மூலம் நோய்களைத் தடுப்பதிலும் சிகிச்சை அளிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

Image Source: istock

சித்த மருத்துவம்

தமிழ்நாட்டில் தோன்றிய இந்த பாரம்பரிய மருத்துவ முறை, தாவரங்கள் மற்றும் தாதுக்கள் போன்ற இயற்கைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு நோய்களைத் தீர்ப்பதாகும்.

Image Source: istock

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படும் இந்தியரான சுஸ்ருதரால் எழுதப்பட்ட ‘சுஸ்ருத சம்ஹிதா’ எனும் நூல் உலகளவில் அறுவை சிகிச்சைகளுக்கான முதன்மை வழிகாட்டியாகக் கருதப்படுகிறது.

Image Source: istock

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

நவீன கண்டுபிடிப்பு போல் தோன்றும் இதை இந்தியர்கள் சிதைந்த உடல் பாகங்களை சரி செய்யப் பயன்படுத்தியுள்ளனர். கிமு 2000-ல் எழுதப்பட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை புத்தகம் இதற்கு சான்றாகும்.

Image Source: istock

தொழுநோய்க்கான சிகிச்சை

சுஸ்ருத சம்ஹிதா புத்தகத்திலும், அதற்கும் முந்தைய அதர்வண வேதத்திலும் தொழுநோய் சிகிச்சை முறை விவரிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு கூறுகிறது. மொத்தத்தில் இதற்கான சிகிச்சை இந்தியாவில் தோன்றியது.

Image Source: istock

கருங் காய்ச்சல்

புரோட்டோசோன் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் கருங் காய்ச்சலுக்கான தீர்வை 1929-ல் இந்தியாவின் உபேந்திரநாத் பிரம்மச்சாரி கண்டுபிடித்தார். இதற்காக நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.

Image Source: istock

இரத்த நாடி பரிசோதனை

நோயைக் கண்டறிவதற்கான ஒரு பாரம்பரிய முறையாகும் இது. நாடி துடிப்பின் வேகம் மற்றும் தன்மையைக் கொண்டு நோயைக் கண்டறியும் இந்த முறை, இன்றும் சில மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

Image Source: istock

யோகா

இது உடல், மனம் மற்றும் ஆன்மாவை சமநிலைப்படுத்தும் ஒரு பண்டைய இந்தியக் கலை. ஆசனங்கள், மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பயன்படுகிறது.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: முல்லீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

[ad_2]