[ad_1] அற்புதமான மூலிகை திப்பிலியின் மருத்துவ குணங்கள்

Jul 8, 2024

அற்புதமான மூலிகை திப்பிலியின் மருத்துவ குணங்கள்

Nivetha

திப்பிலி மூலம்

திப்பிலி மூலிகையின் வேரினை 'திப்பிலி மூலம்' என்று கூறுகிறார்கள். மேலும் இந்த மூலிகையை 'மாதவி', 'கணா' உள்ளிட்ட வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள்.

Image Source: istock

சளி-மூட்டு வாதம்

நன்கு உலர வைத்த திப்பிலி உஷ்ண வீரியமாக மாறுகிறது. இது சளி, மூட்டு வாதம், கபம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து.

Image Source: istock

திப்பிலி தைலம்

திப்பிலி கொண்டு தயாரிக்கப்படும் தைலம் மூல நோய்கள் மற்றும் குடல் வாய்வு சேர்ந்தால் பயன்படுத்தப்படும் 'இனிமா' போன்றும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை 15 நாட்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது.

Image Source: istock

வெள்ளைப்படுதல்

கருமிளகை விட அதிகளவு காரத்தன்மை கொண்ட திப்பிலி ஒரு 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்து எடுத்து பொடியாக்கி தினமும் காலையில் 5 கிராம் அளவில் அப்பொடியை அரிசி கழுவிய நீரில் போட்டு குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

Image Source: istock

​பல் வலி

திப்பிலி பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் பேஸ்ட்களை பயன்படுத்தி வந்தால் பல் வலி மற்றும் பல் சார்ந்த பிரச்சனைகள் தீரும். பைபர் நிறைந்த திப்பிலி உடலில் கொழுப்பை குறைக்க உதவுவதோடு, செரிமானம் சார்ந்த பிரச்சனைகளையும் குணமாக்கக்கூடியது

Image Source: istock

புற்றுநோய்

புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்ட திப்பிலியை நோய் எதிர்ப்பு திறன் நிறைந்துள்ளதால் வயிற்று புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

Image Source: istock

தொண்டை கமறல்

திப்பிலி, தோல் நீக்கிய சுக்கு, மிளகு உள்ளிட்ட 3 பொருட்களை சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து அரை கிராம் அளவிலான தேனோடு சேர்த்து மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, தொண்டை கமறல், நீர் கோவை, வயிற்று பொருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் குணமாகும்.

Image Source: istock

ஆண்மை பெருகும்

திப்பிலி பொடியை நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். பசும்பாலில் திப்பிலி பொடியை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இருமல், வாய்வு தொல்லை நீங்கும். திப்பிலி மற்றும் கடுக்காய் பொடியினை சமஅளவில் எடுத்து தேனில் கலந்து அரை டீஸ்பூன் அளவு காலை மாலை என 2 வேளை சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் குணமாகும்.

Image Source: istock

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறில் திப்பிலியை ஊறவைத்து பின்னர் உலர்த்தி பொடியாக்கி அரை கிராம் அளவு தினமும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஏப்பம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை சரியாகும். திப்பிலி, சித்திரத்தை, பனங்கற்கண்டு, அதிமதுரம் உள்ளிட்ட நான்கையும் பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வளிக்கும்.

Image Source: Samayam Tamil

Thanks For Reading!

Next: காலை பொழுதை சந்தோஷமாக மாற்ற கூடிய சத்தான உணவு வகைகள்

[ad_2]