[ad_1] அலுவலகத்திற்கு ஏற்ற 'Dress Color Combo' எது?

அலுவலகத்திற்கு ஏற்ற 'Dress Color Combo' எது?

Jun 13, 2024

By: Pavithra

எந்த டிரஸ் போடுவது?

அலுவலகத்திற்கு எந்த டிரஸ் போட்டுச் செல்வது என்று தினமும் காலையில் தலையைப் பிச்சி கொள்கிறீர்களா? கவலை வேண்டாம்! மரியாதையையும், பாராட்டுகளையும் உங்களுக்குப் பெற்றுத்தரக்கூடிய சில கலர் காம்போகளை பார்ப்போம்.

Image Source: pexels-com

Navy blue மற்றும் Grey!

இது ஒரு நவீன மெருகூட்டும் தோற்றத்தைத் தரக்கூடியது. Navy blue அறிவையும், Grey நிதானத்தைப் பிரதிபலிப்பதால், இது எல்லா அலுவலக சூழலுக்கும் ஏற்ற பொருத்தமான சேர்க்கையாகக் கருதப்படுகிறது.

Image Source: unsplash-com

Olive Green மற்றும் White

தூய்மை மற்றும் செழிப்பைப் பிரதிபலிக்கும் இந்த சேர்க்கை, புத்துணர்ச்சியாகவும், தெளிவாகவும் உங்களின் தோற்றத்தைக் காட்டும் திறன் கொண்டது. இது நேர்த்தியான அலுவலக ஆடைகளுக்கு ஏற்றது.

Image Source: unsplash-com

Yellow மற்றும் Brown

ஆற்றல் மற்றும் நிலைத்தன்மையை ஆளுமை கலந்து வெளிப்படுத்தும் இந்த yellow மற்றும் brown நிறச் சேர்க்கை, அலுவலக சந்திப்பு மற்றும் நிகழ்வுகளில் பலரின் கவனத்தை உங்களை நோக்கி ஈர்க்கக் கூடியது.

Image Source: unsplash-com

White மற்றும் Ink Blue

கண்ணைக் கவரும் இந்த சேர்க்கை கம்பீரமான தோற்றத்தைத் தரவல்லது. White மரியாதையையும், Ink Blue வெளிப்படைத்தன்மையையும் குறிக்கிறது என்பதால் அலுவலகம் சார்ந்த சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்றது.

Image Source: unsplash-com

Maroon மற்றும் Tan

மேன்மையை வெளிப்படுத்தும் Maroon மற்றும் Tan நிறப் பொருத்தம் ஒருவரின் தனித்தன்மையையும் நேர்த்தியையும் பிரதிபலிக்கும் அழகான சேர்க்கையாகும். இது ஒரு சிறந்த day to day அலுவலக உடை சேர்க்கையாகும்.

Image Source: unsplash-com

Burgundy மற்றும் Beige

இந்த Burgundy மற்றும் Beige நிறப் பொருத்தம் சிந்தனை மற்றும் நேர்த்தியை அலுவலக சூழலுக்கு ஏற்றவாறு காட்டக்கூடியது. அதனால் இது ஒரு பெரும்பான்மையான அலுவலக ஆடை நிறப் பொருத்தம் ஆகும்.

Image Source: unsplash-com

Sky Blue மற்றும் Dark Grey

தினசரி அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற இந்த Sky Blue மற்றும் Dark Grey சேர்க்கை புத்துணர்வான தோற்றத்தைத் தரக்குடியது. இது சாந்தம் மற்றும் அடக்கத்தைப் பிரதிபலிக்கும் நிறச் சேர்க்கை.

Image Source: unsplash-com

Peach மற்றும் Cream

உங்கள் அழகு மற்றும் சீரான தோற்றத்தை எடுத்துக்காட்டும் Peach மற்றும் Cream நிறச் சேர்க்கையானது மெல்லிய ஒளிர்வைத் தரக்கூடியது. பலரது பார்வையை உங்களை நோக்கித் திருப்பும் வசீகர தோற்றத்தை அளிக்கும்.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் இத்தனை பிரச்சனைகள் வருமா?

[ad_2]