Jun 21, 2024
By: Anojஅலுவலக வேலையால் உண்டாகும் மன அழுத்தம், உடல் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமின்றி உற்பத்தி திறனையும் குறையக்கூடும். இந்தப் பதிவில், ஆபீஸ் ஸ்ட்ரெஸ் சமாளிக்க உதவும் எளிய வழிகளை பற்றி காணலாம்
Image Source: pexels-com
நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போது, மன அழுத்தமும் அதிகரிகக்க்கூடும். இவற்றை சமாளிக்க முதலில் முன்னுரிமை லிஸ்ட் உருவாக்க வேண்டும். சிக்கலான பணிகளை தள்ளிப்போடாமல் முன்கூட்டியே முடிப்பது நல்லது
Image Source: pexels-com
வேலையின் போது அவ்வப்போது பிரேக் எடுக்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள். சிறிய இடைவெளி ஆற்றல் அளவை அதிகரிப்பதோடு மனதில் தெளிவை ஏற்படுத்தக்கூடும்
Image Source: pexels-com
மோட்டிவேஷனல் Quotes மற்றும் டாஸ்க் முடிக்க வேண்டிய தேதியை Sticky Notes-ல் எழுதி மேசையில் ஒட்டிக்கொள்ளுங்கள். அவற்றை பார்க்கும் போது பணிகளை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்கிற உந்துதல் கிடைக்கக்கூடும்
Image Source: pexels-com
நீங்கள் பணிபுரியும் மேஜையில் உள்ள பொருட்களை ஆங்காங்கே போட்டு வைப்பது, நெகட்டிவ் வைப் உண்டாக்கக்கூடும். அவற்றை முறையாக அடுக்கி வைப்பது, பணியில் கவனம் செலுத்துவதை அதிகரிக்கக்கூடும்
Image Source: pexels-com
மூச்சு பயிற்சி செய்வது, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதோடு மன அழுத்தம் ஹார்மோன் அளவை குறைக்கக்கூடும். மேலும், ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு தசைகளில் அழுத்தத்தை போக்கக்கூடும்
Image Source: pexels-com
தாவரங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடும். இருப்பிடத்தில் பசுமையான சூழலை பராமரிப்பது ரத்த அழுத்தத்தை குறைத்து மனநிலை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உங்க பணியிடத்தை சுற்றி செடிகள் இருப்பதை உறுதி செய்யுங்கள்
Image Source: istock
நட்ஸ், பழங்கள் அல்லது தயிர் போன்ற ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதோடு மன அழுத்தத்திற்கு பங்களிக்கும் ஆற்றல் இழப்பை தடுக்கக்கூடும்
Image Source: pexels-com
சமூக தொடர்பு, ஒரு சிறந்த மன அழுத்த நிவாரணி ஆகும். சக ஊழியர்களுடன் உரையாடி உறவை மேம்படுத்த நேரத்தை ஒதுக்க செய்யுங்கள். பணியிடத்தில் ஆதரவான நெட்வொர்க் அமைப்பை உருவாக்க செய்யுங்கள்
Image Source: pexels-com
Thanks For Reading!