Aug 20, 2024
ஒரு அலுவலகத்தில் தலைமை சரியாக இல்லையென்றால், ஒட்டுமொத்த உற்பத்தி திறனும் பாதிக்கக்கூடும். அவர்களால் எதிர்பார்த்த இலக்கை எட்டவும் முடியாது. இந்த பதிவில், மோசமான தலைமை பண்பை குறிக்கும் 8 பண்புகளை பற்றி காணலாம்.
Image Source: pexels-com
இலக்கை அடைய எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வை மிகவும் அவசியமாகும். அது இல்லையென்றால், எதற்காக உழைக்கிறோம் என்பதிலே குழப்பம் உண்டாகக்கூடும்
Image Source: pexels-com
முக்கியமான தகவல்களை சரியாக பகிர மாட்டார்கள் அல்லது பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார்கள். இந்த பழக்கத்தை கொண்டிருந்தால் தேவையற்ற குழப்பமும், புரிதல் இல்லாமையும் உண்டாகக்கூடும்
Image Source: pexels-com
பிறரின் கருத்துகளை புறக்கணிப்பது மோசமான தலைவரின் முக்கியமான பண்பாகும். இச்செயல் தொழில் துறையில் அவரது வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கக்கூடும்
Image Source: pexels-com
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை பார்க்காமல், தனிப்பட்ட விருப்பம், ஈகோ போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது மோசமான தலைவரின் பண்புகள் ஆகும்
Image Source: pexels-com
பணியிடம் நன்றாக இருந்தால் மட்டுமே, ஊழியர்கள் முழு மனதுடன் செயல்படுவார்கள். மாறாக, கடைசி நிமிடத்தில் வேலை கொடுப்பது, விடுமுறையில் பணியாற்ற சொல்வது, லீவ் கொடுக்க மறுப்பது போன்ற விஷயங்கள், மனதில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கக்கூடும்.
Image Source: pexels-com
குழுவின் ஒவ்வொரு செயலையும் கண்காணித்து கேள்வி கேப்டது மோசமான தலைவரின் பண்புகளின் ஒன்றாகும். இது அவர்கள் மீது நம்பிக்கை இல்லாததை காட்டுவதோடு படைப்பாற்றல் திறனை குறைக்கும் செயலாகும்
Image Source: pexels-com
சில நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத முடிவுகளை எடுப்பார்கள். அவற்றால் எந்த மாதிரியான பிரச்சனை வரக்கூடும் என்பதை யோசிக்கவும் மாட்டார்கள். சாத்தியமற்ற இலக்கை நிர்ணயிப்பது அவருக்கு கீழ் பணியாற்றுபவர்களிடம் குழப்பத்தை உண்டாக்குவதோடு டீம் செயல்திறனை குறைக்கக்கூடும்
Image Source: pexels-com
ஒரு விஷயம் தவறாக சென்றால், அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனை சரிசெய்யும் பணிகளில் ஈடுபடுவதற்கு பதிலாக மற்றவர்கள் மீது எப்படி குற்றச்சாட்டலாம் என்பதிலே தீவிரமாக செலுத்துவார்கள்.
Image Source: pexels-com
Thanks For Reading!