Aug 6, 2024
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோலை வீணாக கீழே போடாமல் அந்த தோல்களை வெயிலில் உலர வைத்து பொடி செய்து சருமத்திற்கு பயன்படுத்தி வரலாம். இரண்டு தோலிலும் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன
Image Source: istock
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழத்தின் தோல்களை மெதுவாக உரித்து சூரிய ஒளியில் 2 முதல் 3 நாட்கள் உலர வைக்க வேண்டும். இந்த முறைப்படி உலர வைக்கும் போது நேரம் எடுக்கும் என்றாலும் நல்ல பலனை காண முடியும்
Image Source: istock
இரண்டு பழத்தோலும் நன்றாக உலர்ந்த பிறகு அதை ஒரு மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனை காற்று புகாத டப்பாவில் அடைத்து 6 மாதங்கள் வரை சேமிக்கலாம்.
Image Source: istock
எலுமிச்சை தோல் எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை நீக்குகிறது. ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. முன்கூட்டியே வயதாகுவதை தடுக்கிறது. முகப்பொலிவு மற்றும் கரும்புள்ளிகளை போக்குகிறது.
Image Source: istock
ஆரஞ்சு பழத் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இதன் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சருமத்தை இறுக்கி நல்ல நிறத்தை கொடுக்கிறது. சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது.
Image Source: istock
ஆரஞ்சு மற்றும் லெமன் தோல் பொடியை பேஸ்ட்டாக்கி முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து 15-20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இயற்கையான பொலிவை தருகிறது.
Image Source: istock
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோல் பொடியை கொண்டு ஸ்க்ரப் செய்யுங்கள். இதை முகத்தில் வட்ட இயக்கத்தில் தேய்த்து 2-3 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இறந்த சரும செல்களை நீக்குகிறது.
Image Source: istock
இந்த ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோல் பொடியை கற்றாழை ஜெல்லுடன் கலந்து பேஸ்ட்டை உருவாக்கி முகப்பருக்களில் அப்ளை செய்யுங்கள். இரவு முழுவதும் விட்டு விட்டு மறுநாள் காலையில் கழுவுங்கள்.
Image Source: pexels-com
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோல் பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இது சருமத்தை இறுக்கமாகவும், சுருக்கங்களை குறைக்கவும் உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!