[ad_1] அழகான புருவங்கள் பெற இதோ சில குறிப்புகள்

Jul 10, 2024

அழகான புருவங்கள் பெற இதோ சில குறிப்புகள்

Nivetha

மெல்லிய புருவங்கள்

ஒருவரது முகத்தில் முதலில் ஈர்ப்பினை பெறுவது கண்களும், புருவங்களும் தான். ஆனால் ஒரு சிலருக்கு புருவங்கள் மற்றும் கண் இமைகளின் முடி அடர்த்தியாக இல்லாமல் மெல்லியதாக இருக்கும்.

Image Source: istock

​தூக்கமின்மை

இதற்கு என்ன காரணம் என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. உண்மையில் தூக்கமின்மை தான் இதற்கு காரணம். சரியான தூக்கம் இல்லையெனில் கண் இமைகள் மற்றும் புருவங்களிலுள்ள முடிகள் உதிர துவங்கும்.

Image Source: istock

குறிப்பு

இயற்கையாகவும் சிலருக்கு புருவம் மற்றும் கண் இமைகள் அடர்த்தியாக இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கான பதிவு தான் இது. இப்பதிவில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது, பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Image Source: istock

மசாஜ்

தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்னர் ஆமணக்கு எண்ணெய்யை புருவத்தில் தடவி 5 நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

Image Source: istock

கரிசலாங்கண்ணி இலைகள்

கரிசலாங்கண்ணி இலைகளை தேங்காய் எண்ணையோடு சேர்த்து மிதமாக சூடு செய்து அதனுடன் 5 சொட்டு ஆமணக்கு எண்ணையையும் சேர்த்து தினமும் இரவில் புருவங்களிலும் கண்களிலும் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 2 அல்லது 3 வாரங்களில் இதற்கான பலனை காணலாம்.

Image Source: istock

பாதம் எண்ணெய்

புருவங்களில் முடி வளர பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவலாம். அதே போல் இந்த எண்ணையை இரவில் புருவங்களில் தடவிவிட்டு காலையில் குளித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

Image Source: istock

கற்றாழை ஜெல்

நேரடியான கற்றாழை ஜெல்லை எடுத்து கண் புருவங்களில் தடவி நன்கு உலர்ந்த பிறகு கழுவவும். இப்படி வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்தால் நல்ல பலன் உண்டு.

Image Source: istock

வெங்காய சாறு

அடர்த்தியான புருவங்களை பெற வெங்காய சாறினை எடுத்து ஒரு பஞ்சை அதில் நனைத்து புருவங்களில் தடவுங்கள். அது காய்ந்த பிறகு ரோஸ் வாட்டர் கொண்டு புருவங்களை கழுவுங்கள்.

Image Source: istock

ஆலிவ் எண்ணெய்-பால்

​ஆலிவ் எண்ணெய்யை இரவில் புருவங்களில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம், புருவங்களில் முடி வளர்வதை இது தூண்டும். அதே போல், வெதுவெதுப்பான பாலை பஞ்சை கொண்டு நனைத்து புருவங்களில் தடவி காய்ந்த பின் கழுவினாலும் நல்ல பலன் பெறலாம்.

Image Source: Samayam Tamil

Thanks For Reading!

Next: பிரஷ் போட்டு குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

[ad_2]