Jun 4, 2024
நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் விலையுயர்ந்த வகையாக இருந்தால் சிறந்த பலனை தரும் என ஒரு கட்டுக்கதை நிலவுகிறது. ஆனால் உண்மையில் விலையை விட பிராண்ட் வகைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
Image Source: istock
சில அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி சருமத் துளைகளை நிரந்தரமாக சுருக்கலாம் என நம்புகின்றனர். ஆனால் அதை நிரந்தரமாக மாற்ற இயலாது. தற்காலிகமான மாற்றத்தை மட்டுமே பண்ண முடியும்.
Image Source: istock
மக்களிடையே கெமிக்கல்கள் நிறைந்த அழகு சாதனப் பொருட்கள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ஒரு எண்ணம் நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் சில இயற்கை பொருட்களும் உங்களுக்கு பக்க விளைவுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
சன்ஸ்க்ரீனை கோடை காலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் சன்ஸ்க்ரீனை எல்லா நாட்களிலும் பயன்படுத்தலாம். இது சருமம் வயதாகுவதை தடுக்க உதவுகிறது.
Image Source: istock
பொதுவாக அழகு சாதனப் பொருட்கள் பெண்களுக்கு மட்டுமே என நம்புகின்றனர். ஆனால் ஆண்களும் தங்கள் சருமத்திற்கு ஏற்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி வரலாம்
Image Source: pexels-com
மேக்கப் போடுவது உங்களுக்கு முகப்பருக்களை உண்டாக்கும் என்ற கட்டுக்கதை நிலவி வருகிறது. உண்மையில் காமெடோஜெனிக் அல்லாத பொருட்களை பயன்படுத்தி வந்தால் சரும பிரச்சனைகளை தடுக்கலாம்.
Image Source: istock
சரும பராமரிப்பு செய்வது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது என பலர் நம்புகின்றனர். ஆனால் சருமத்தை டிடாக்ஸ் செய்யும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் இல்லை என்பதே உண்மை.
Image Source: istock
அதிகப்படியாக எக்ஸ்ஃபோலியண்ட் செய்வது எப்பொழுதுமே உங்கள் சருமத்திற்கு நல்லது கிடையாது. இது சருமத்தில் பாதிப்பை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
எண்ணெய் சருமத்திற்கு பொதுவாக மாய்ஸ்சரைசர் வேண்டாம் என்ற எண்ணம் நிலவி வருகிறது. ஆனால் லேசான மாய்ஸ்சரைசரை நீங்கள் பயன்படுத்தி வரலாம்.
Image Source: istock
Thanks For Reading!