May 4, 2024
வேப்பிலை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களை போக்க உதவுகிறது. வேப்பிலையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தோல் மற்றும் முடி பராமரிப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
Image Source: istock
20 வேப்பிலை இலைகளை 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு இலையின் நிறம் பச்சையாகும் வரை கொதிக்க விட வேண்டும். அதை வடிகட்டி ஒரு காட்டன் பஞ்சை எடுத்து நனைத்து முகத்தை துடைத்து எடுங்கள். இது முகப்பரு, தழும்பு மற்றும் கருமையை போக்க உதவுகிறது
Image Source: istock
வேப்பிலை பொடி, துளசி மற்றும் சந்தன பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து வர கொப்புளங்கள் குறையும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள்.
Image Source: istock
வேப்பிலை பவுடருடன் தண்ணீர் மற்றும் திராட்சை விதை எண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் மாய்ஸ்சரைசராக அப்ளை செய்து வாருங்கள்.
Image Source: istock
வேப்பிலைக்கு சருமத்தை புதுப்பிக்கும் தன்மை உள்ளது. முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. வேப்பிலை எண்ணெய் சருமம் வயதாகுவதை தடுக்கிறது.
Image Source: istock
வேப்பிலை இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளுங்கள். இந்த தண்ணீரை ஷாம்பு போட்ட பிறகு பயன்படுத்தி வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
Image Source: istock
வேப்பிலை கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்களை போக்க உதவுகிறது. வேப்பிலை பொடியை தண்ணீர் விட்டு கலந்து பேஸ்ட்டாக்கி கண்களைச் சுற்றி அப்ளை செய்து வந்தால் கருவளையங்கள் நீங்கும். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
Image Source: istock
வேப்பிலை, தலைமுடியை சுத்தப்படுத்தி மயிர்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
Image Source: pexels-com
வேப்பிலை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக செயல்படுவதால், நரைமுடி ஏற்படுவதை மெதுவாக்குவதாக நம்பப்படுகிறது. வேப்பிலை பொடி மற்றும் தயிரை மிக்ஸ் செய்து தலைமுடி அப்ளை செய்து, 10 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்யவும்
Image Source: istock
Thanks For Reading!