Jul 31, 2024
By: Nivethaநம்முள் பலருக்கு நமது வீட்டில் தோட்டம் அமைத்து பூக்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனை பலரும் நிஜத்தில் செய்தும் வருகிறார்கள், இந்நிலையில் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த அவகோடா செடியை வீட்டில் வைத்து வளர்ப்பது எப்படி என்பதை தான் இப்பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
Image Source: istock
அவகோடா பழத்தை வெண்ணெய் பழம் என்றும் கூறுவார்கள். இப்பழத்தில் அதிகளவு வைட்டமின்கள், ஒமேகா 3, ஃபேட்டி அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. மூளை, இதயம், சிறுநீரக பிரச்சனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இப்பழம் தீர்க்கக்கூடியது.
Image Source: istock
பல சிறப்பு குணங்கள் நிறைந்த இந்த அவகோடா செடியை வீட்டில் வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் உங்கள் சந்தைக்கு சென்று பூச்சிகள் இல்லாத நல்ல பழமாக பார்த்து வாங்குங்கள். அதனை நன்கு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
Image Source: istock
நன்கு கழுவிய பிறகு அவகோடா பழத்தை அறுத்து அதற்குள் இருக்கும் விதையை ஜாக்கிரதையாக எடுத்து வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு நன்கு கழுவுங்கள். பின்னர் அதை பாலீதீன் கவர் ஒன்றில் போட்டு ஒருசில வாரங்கள் வெயில் படாமல் பராமரித்து வையுங்கள்.
Image Source: istock
ஒரு சில வாரங்கள் கடந்த பிறகு பாலீதீன் பையில் நீங்கள் போட்டு வைத்த அவகோடா விதை முளைத்திருக்கிறதா என்று எடுத்து பாருங்கள். நிச்சயம் அது முளைத்திருக்கும், இதனை தொடர்ந்து இந்த விதையின் மேல் பக்கம் எது கீழ் பக்கம் என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
Image Source: istock
அடுத்து, ஒரு கண்ணாடி கிளாஸ் அல்லது கண்டெய்னர் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நிரப்பி கொள்ளுங்கள். அதில் முளைத்த விதையின் வேர்பக்கம் கீழே இருக்கும் படி போட்டு வையுங்கள். பின்னர் அந்த கண்டெய்னர் அல்லது கிளாஸை வெயில் படும்படி வைக்கவும்.
Image Source: istock
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை அதிலிருக்கும் தண்ணீரை தவறாமல் மாற்ற வேண்டும். அதில் இருக்கும் விதையிலிருந்து வந்த செடி சற்று வளரும் வரை இம்முறையை பின்பற்றுங்கள். அப்படி செடி வளர்ந்த பட்சத்தில் அதனை உங்கள் தோட்டத்தில் நடவு செய்யலாம்.
Image Source: istock
ஒரு பானையில் மண்ணை நிரப்பி அதில் இந்த வளர்ந்த அவகோடா செடியை வையுங்கள். இந்த செடிக்கு தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு மிகவும் முக்கியம். மேலும் இந்த செடி எப்பொழுதும் ஈரப்பதமாக இருத்தல் அவசியம்.
Image Source: istock
இம்முறையை சரியாக பின்பற்றும் பட்சத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகளில் நீங்கள் நடவு செய்த செடியில் பழங்களை தாராளமாக சாகுபடி செய்யலாம். உடலுக்கு தேவையான பொட்டாசியம் அதிகளவில் நிறைந்துள்ள இப்பழத்திற்கு சந்தையில் நல்ல வரவேற்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: pexels
Thanks For Reading!