[ad_1] ஆக்சன் கிங் 'அர்ஜுன்' பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

ஆக்சன் கிங் 'அர்ஜுன்' பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

Anoj, Samayam Tamil

Aug 14, 2024

அர்ஜுன் சார்ஜா

கோலிவுட்டில் நாட்டுப்பற்றை போற்றும் வகையிலான படங்களில் நடித்ததில் மிகவும் முக்கியமான நடிகர் அர்ஜுன். அவரது படங்களில் வரக்கூடிய சண்டை காட்சிகளின் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி ஆக்சன் கிங்காக மாறியவர். அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்

Image Source: pexels-com

சினிமா குடும்பம்

சினிமா குடும்பம்

அர்ஜுனின் தந்தை கன்னட சினிமாவில் மிகப்பெரிய நடிகர் ஆவார். 1988ல் கன்னட நடிகை நிவேதிதாவை அர்ஜுன் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ஐஸ்வர்யா, தமிழ் மற்றும் கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Image Source: instagram-com/arjunsarjaa

போலீஸ் ஆபீசர் ஆசை

அர்ஜுன் இளம் வயதில் போலீஸ் ஆபீசர் ஆக வேண்டும் என்றே ஆசைப்பட்டுள்ளார். அதன் காரணமாகவே ஏராளமான பட வாய்ப்புகளை நிரகாரித்து வந்ததாக கூறப்படுகிறது. அர்ஜுனை நடிகராக்க அவரது தந்தைக்கும் விருப்பம் கிடையாது என்றே கூறப்படுகிறது

Image Source: instagram-com/arjunsarjaa

கராத்தே பிளாக் பெல்ட்

1973ல் வெளியான Enter the Dragon படத்தை பார்த்து புரூஸ் லீயின் தீவிர ரசிகராக அர்ஜுன் மாறியுள்ளார். 16 வயதிலே கராத்தே பயிற்சி பெற்ற அர்ஜுன், பிளாக் பெல்ட் வைத்துள்ளார்.

Image Source: instagram-com/arjunsarjaa

பெயர் மாற்றம்

அர்ஜூனின் இயற்பெயர் அசோக் பாபு ஆகும். 1981ல் Simhada Mari Sainya எனும் படத்தில் அர்ஜுன் முதன்முறையாக நடித்தப்போது, அப்படத்தின் இயக்குனர் தான் அர்ஜுன் என பெயரை மாற்றியுள்ளார்

Image Source: instagram-com/arjunsarjaa

பன்முக நாயகன்

கன்னடாவில் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்த அர்ஜுன், அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார். அச்சமயத்தில் ஓய்வே இல்லாமல் படங்களில் நடித்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, போலீஸ் வேடத்தில் அர்ஜுன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திருந்தார்

Image Source: instagram-com/arjunsarjaa

இயக்குனர் அவதாரம்

அர்ஜுன் பன்முக திறமையாளராக விளங்கினார். நடிப்பு மட்டுமின்றி ஏராளமான திரைப்படங்களை சொந்தமாக எழுதி இயக்கியுள்ளார். சில திரைப்படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.

Image Source: instagram-com/arjunsarjaa

ஆஞ்சநேயர் கோயில்

அர்ஜுன் ஹனுமானின் தீவிர பக்தர் ஆவார். சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். அங்கு 200 டன் எடையில் 30 அடி உயரத்தில் ஹனுமான் உட்கார்ந்து இருப்பது போன்ற சிலையும் வைக்கப்பட்டுள்ளது

Image Source: instagram-com/arjunsarjaa

சொத்து மதிப்பு

சினிமாவில் பல தசாப்தங்களாக பயணிக்கும் அர்ஜுனின் சொத்து மதிப்பு, ரூ.80 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்கிய அவர், லியோவில் ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அவரிடம் ஏராளமான சொகுசு கார்களும் உள்ளன

Image Source: instagram-com/arjunsarjaa

Thanks For Reading!

Next: தங்கலான் நாயகி ‘மாளவிகா’ பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யங்கள்!

[ad_2]