Aug 7, 2024
மாணவர்களுக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை கற்பித்து அவர்களின் சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள். ஆனால், ஆசிரியர் பணி பற்றி மக்களிடையே பரவியுள்ள தவறான எண்ணங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
பிற பணிகளில் ஜெயிக்க முடியாதவர்கள், இறுதியாக ஆசிரியர் பணியை தேர்ந்தெடுப்பதாக பலரும் கருதுகிறார்கள். இது அப்பணிக்கு தேவையான அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை குறைத்து மதிப்பிடும் செயலாகும்
Image Source: istock
ஆசிரியராக இருந்தால் சமூகத்தில் பெரிய அளவில் மதிப்பு இருக்காது என பலரும் கூறி வருகிறார்கள். ஆனால், உண்மையில் சமூகத்தில் மிகவும் மதிக்க வேண்டிய நபர்கள் ஆசிரியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது
Image Source: istock
ஆசிரியர் பணியில் சேர்ந்தால் ஒரே அறைக்குள் நம் வாழ்க்கை முடிந்துவிடும் என்பது தவறாகும். குழுவுக்கு தலைமை தாங்குதல், ஆய்வுப்பணி, நிர்வாக பொறுப்பு போன்ற பாத்திரங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் ஆசிரியர்களுக்கு உள்ளது
Image Source: pexels-com
ஆசிரியர் பணியில் அதிக சம்பளம் கிடைக்காது என பலரும் கூறுகின்றனர். இது 100 சதவீதம் உண்மை கிடையாது. ஆசிரியர்களிடையே சம்பள வேறுபாடு இருந்தாலும், நல்ல அனுபவமுள்ள ஆசிரியருக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கக்கூடும்
Image Source: istock
புத்தகத்தில் இருப்பதை சொல்லித்தருவது மட்டுமே ஆசிரியர்களின் பணி கிடையாது. மாணவர்கள் சமூகத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், சமூக திறன்களை வளர்ப்பது, குணாதிசயம் மாற்றுவது என பலவற்றில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்
Image Source: istock
மாணவர்களுக்கு விடுமுறை என்றால், ஆசிரியருக்கு விடுமுறை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை கிடையாது. பெரும்பாலான விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்வது மட்டுமின்றி அலுவலக ரீதியான பணிகளில் ஈடுபட செய்வார்கள்
Image Source: pexels-com
ஆசிரியர்களின் பணி நேரம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை என்பது தவறாகும். அவர்கள் வீட்டிற்கு சென்றாலும் பணி செய்வார்கள் என்பது தான் உண்மை. அடுத்த நாளுக்கான நோட்ஸ் எடுப்பது, விடைத்தாள் திருத்துவது போன்ற பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள்
Image Source: istock
யார் வேண்டுமானாலும் ஆசிரியர் ஆகலாம்.. அது ரொம்பவே ஜாலியான வேலை என்னும் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். கல்வியறிவை தாண்டி ஏராளமான திறன்கள் ஆசிரியர்களுக்கு தேவைப்படுகிறது. தொடர்ச்சியான கற்றல் ஆசிரியர் பணிக்கு மிகவும் அவசியமாகும்
Image Source: pexels-com
Thanks For Reading!