May 17, 2024
By: mukesh Mவயதில் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதும், சிறியவர்கள் பெரியவர்கள் ஆசிர்வதிப்பதும் இந்தியர்களின் மரபுகளில் ஒன்றாக கடைப்பிடிக்கப்படும் நிலையில், ஆசிர்வதிக்கும் போது ஏன் அனைவரும் வலது கையை பயன்படுத்துகின்றனர்? இடது கையை தவிர்ப்பது ஏன்? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
பெரியோர் கூற்றுப்படி வலது கை சூரிய சக்தியுடன் தொடர்பு கொண்டது. அந்த வகையில் வலது கை மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே, ஆசிர்வதிக்கும் போது வலது கை பயன்படுத்தப்படுகிறது.
Image Source: istock
வலது கை ஆனது நேர்மை மற்றும் வலிமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், இடது கை பலவீனத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே ஆசிர்வதிக்கும் போது இடது கை தவிர்க்கப்படுகிறது.
Image Source: istock
வலது கை ஆனது நேர்மறை ஆற்றலை வரவேற்கும் கையாகவும், இடது கை ஆனது, எதிர்மறை ஆற்றலை வரவேற்கும் கையாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எதிர்மறை ஆற்றலை ஒதுக்கி வைக்கும் வகையில் ஆசிர்வாதங்களின் போது இடது கை தவிர்க்கப்படுகிறது.
Image Source: istock
இடது கையுடன் ஒப்பிடுகையில் வலது கை ஆனது அதிக பொறுப்புகளை ஏற்கும் ஒரு கை ஆகும். மேலும், இரண்டு கைகளிள் முதன்மையான கையாகவும் இது பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வலது கைக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுகிறது.
Image Source: istock
நம் உடலின் பல பகுதிகள் கிரகங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக ஜோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் நம் வலது கையும் கிரகங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாகவே ஆசிர்வதிக்கும் போது வலது கை உபயோகிப்பதாகவும் கூறப்படுகிறது.
Image Source: istock
வலது கையுடன் ஒப்பிடுகையில் இடது கை ஆனது அசுத்தத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இடது கை பயன்படுத்தி ஆசிர்வதிப்பதும், அசுத்தமான ஒரு காரியமாக பார்க்கப்படுகிறது.
Image Source: istock
பெரும்பாலும் இடது கை ஆனது அசுப காரியங்களை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இடது கை பயன்படுத்தி ஆசிர்வதிப்பது, அசப காரியத்தை குறிப்பதற்கு சமம் ஆகிறது. எனவே, ஆசிர்வதிக்கும் போது இடது கையை தவிர்ப்பது நல்லது!
Image Source: istock
பிறரை ஆசிர்வதிக்கும் போது இடது கை பயன்படுத்துவது, ஆசிர்வதிக்கும் நபருக்கும் - ஆசிர்வாதம் பெறும் நபருக்கும் இடையில் மன கசப்பை உண்டாக்கும். மேலும், மன வேதனை, அழுத்தம் உள்ளிட்ட உணர்வுகளுக்கும் வழிவகுக்கும்!
Image Source: pexels-com
Thanks For Reading!