Jul 29, 2024
BY: Anoj, Samayam Tamilஇது ஆடி மாத அம்மன் வழிபாட்டில் தவறாமல் இடம்பெறும் பாயாசம் ஆகும். வெல்லம் மற்றும் தேங்காய் பால் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஆடி பாயாசத்தை, எப்படி எளிதாக தயார் செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
தேங்காய் - 1 கப்; வெல்லம் - 100 கிராம்; ஏலக்காய் - 5; அரிசி மாவு - 2 டீஸ்பூன்; நெய்யில் வறுத்த முந்திரி - 5
Image Source: istock
முதலில் தேங்காயை நன்றாக துருவிகொள்ளவும். அதனை பிளெண்டரில் போட்டு அரை கப் அளவிற்கு தண்ணீர் விட்டு அரைத்துகொள்ளவும்
Image Source: istock
அத்துடன் ஏலக்காய் சேர்த்துவிட்டு, மீண்டும் நன்றாக அரைத்து முதல் தேங்காய் பாலை வடிகட்டி எடுக்கவும்
Image Source: istock
இப்போது தேங்காய் துருவலுடன் மீண்டும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பிளெண்டரில் போட்டு அரைத்து, 2வது தேங்காய் பாலை எடுக்க வேண்டும்
Image Source: istock
அடுப்பில் கடாயை வைத்து வெல்லத்தை சேர்க்க வேண்டும். அத்துடன் தண்ணீரை ஊற்றி வெல்லத்தை நன்றாக கரைத்து வடிகட்டி எடுக்கவும்
Image Source: istock
மீண்டும் கடாயில் கரைத்த வெல்லத்தை சேர்த்து, 2வது எடுத்த தேங்காய் பாலை ஊற்ற வேண்டும். பால் திரிவதை தடுத்திட தேங்காய் பால் கலவையுடன் அரிசி மாவு சேர்க்க வேண்டும்
Image Source: istock
சில நிமிடங்கள் கொதித்த பிறகு முதலாவது எடுத்த தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். சுமார் 2 நிமிடங்கள் கொதித்து கலவை கெட்டியான பால் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்
Image Source: pexels-com
இறுதியாக, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை பொடியாக நசுக்கி கலவையில் சேர்த்தால், சுவையான ஆடி பால் பாயாசம் ரெடி. இதனை ஆடி பால் எனவும் கூறலாம். சுமார் 30 நிமிடத்திற்குள் சுவையான பாயாசம் ரெடி
Image Source: instagram-com/karandi-tales
Thanks For Reading!