Aug 17, 2024
70-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது வென்ற ‘ஆட்டம்’ மலையாள திரைப்படம் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்!
Image Source: instagram-com
படத்தின் திரைக்கதை ஆனது பாலியல் வன்முறையைப் பற்றி பேசுகிறது மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைகள் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது!
Image Source: twitter-com
சஸ்பென்ஸ் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லா இத்திரைப்படம், அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியான திரைக்கதையை கொண்டுள்ளது.
Image Source: twitter-com
பாலியல் துன்புறுத்தல்கள், வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான அடுக்குமுறை என தினம் தினம் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரு படமாக இது உள்ளது.
Image Source: twitter-com
திரைக்கதையின் தேவைக்கு ஏற்ற வகையில் தரமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ஏக்ரிஷி. கதையின் நாயகியாக ஜரின் ஷிஹாப், வினய், கலாபவன் ஷாஜி ஜான் என அனைவரும் தங்கள் பாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
Image Source: twitter-com
கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பின்னணிகளை உருவாக்க தனித்துவமான கைவினைப் பொருட்கள், இயற்கை காட்சிகளை பயன்படுத்தியுள்ளர் படக்குழுவினர்.
Image Source: twitter-com
படத்தின் நாயகியாக நடித்துள்ள ஜரின், திரைக்கதையின் விறுவிறுப்பை குறையாத வகையில் தனது திறனான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் முக்கிய பலமான ஜரின் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது!
Image Source: twitter-com
நாடக குழுவில் நடக்கும் ஒரு கதையாக அமைந்திருக்கும் ஆட்டம் திரைப்படத்திற்கு தேவையான இசை மற்றும் பின்னணியை உறுவாக்கி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இசையமைப்பாளர் பேசில் C J!
Image Source: twitter-com
படத்தின் முடிவு ஆனது பார்வையாளர்களின் முன்னிலையில் கேள்விகள் பல வைத்து அவர்களின் சிந்தனையை தூண்டுகிறது. குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தங்களின் நிலைபாடு என்ன என்பதை சுய பரிசோதனை செய்துக்கொள்ள பார்வையாளர்களை இது தூண்டுகிறது எனலாம்!
Image Source: twitter-com
Thanks For Reading!