[ad_1] ஆட்டு மூளை கட்லெட் - மிகவும் எளிமையாக செய்யலாம் வாங்க!

Jun 18, 2024

ஆட்டு மூளை கட்லெட் - மிகவும் எளிமையாக செய்யலாம் வாங்க!

mukesh M

ஆட்டு மூளை கட்லெட்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கட்லெட் ஒன்றினை மட்டன் மூளை பயன்படுத்தி எளிமையாக தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

ஆட்டு மூளை - 3 | வெங்காயம் - 1 | தக்காளி - 1 | பச்சை மிளகாய் - 3 | இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் | சீரகம் பொடி - 1 ஸ்பூன்

Image Source: istock

தேவையான பொருட்கள்!

வினிகர் - 1 ஸ்பூன் | கார்ன் பிளோர் - 2 ஸ்பூன் | பிரட் துண்டுகள் - 1 | கொத்தமல்லி தழை - 1 கொத்து | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட ஆட்டு மூளையை அகன்ற பாத்திரம் ஒன்றில் ½ கப் தண்ணீர், ஒரு ஸ்பூன் உப்புடன் சேர்த்து தண்ணீர் சுண்ட நன்கு வேக வைத்து, அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆற விடவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

இதனிடையே எடுத்துக்கொண்ட வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 3

தற்போது கட்லெட் மாவு தயார் செய்ய அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் கான்ர் பிளோருடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சீரக பொடி, பிரட் துண்டு சேர்த்து கலக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

தொடர்ந்து இதனுடன் அவித்து எடுத்த ஆட்டு மூளை, வினிகர் ஆகியவற்றையும் சேர்த்து கையில் பிடிக்கும் அளவுக்கு பதமாக பிசைந்துக்கொள்ள கட்லெட் மாவு தயார்!

Image Source: istock

செய்முறை படி - 5

தற்போது கட்லெட் பொரித்து எடுக்க கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதேநேரம், கட்லெட் மாவினை சிறு சிறு அளவு துண்டுகளாக பிடித்து தயார் செய்துக்கொள்ளவும்.

Image Source: istock

ஆட்டு மூளை கட்லெட் ரெடி!

எண்ணெய் நன்கு கொதிக்கும் நிலையில், தயாராக பிடித்து வைத்த கட்லெட் துண்டுகளை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க சுவையான ஆட்டு மூளை கட்லெட் ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: ருசியான அவல் பர்பி.. எப்படி செய்வது பாருங்க!

[ad_2]