May 7, 2024
சில ஆண்களுக்கு தாடியில் சீக்கிரமே நரைமுடி எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடும். அதை சரி செய்ய ஆண்கள் டை அடிப்பது உண்டு. ஆனால் செயற்கை சாயங்கள் கெமிக்கல்கள் நிறைந்தவை. அதற்குப் பதிலாக சில இயற்கை வீட்டுக் குறிப்புகளை பின்பற்றி வரலாம்.
Image Source: istock
உங்கள் தாடி அடர் பழுப்பு நிறத்தை பெற காபி கலவையை பயன்படுத்தலாம். ஒரு கப் டார்க் ரோஸ்ட் காபியை காய்ச்சி தாடி ஷாம்புடன் சேர்த்து கலக்குங்கள். தாடியில் இதை மசாஜ் செய்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
Image Source: istock
பிளாக் டீ பேக்குகளை சூடான நீரில் ஊற்றி தாடியில் தடவி 30 நிமிடங்கள் - 1 மணி நேரம் கழித்து கழுவுங்கள். பிளாக் டீயில் உள்ள டானின்கள் தாடியை இயற்கையாக கருமையாக்க உதவுகிறது.
Image Source: pexels-com
நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது கூந்தலுக்கு இயற்கையான கருமை தன்மையை தருகிறது. நெல்லிக்காய் எண்ணெயை தாடியில் தடவி இரவு முழுவதும் மசாஜ் செய்து காலையில் எழுந்ததும் கழுவுங்கள்.
Image Source: istock
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கறிவேப்பிலை இலைகளை போட்டு கருக ஆரம்பிக்கும் வரை சூடாக்க வேண்டும். பின்னர் இலைகளை வடிகட்டி அந்த எண்ணெயை தாடியில் தடவுங்கள். 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவுங்கள்.
Image Source: istock
வெங்காய சாற்றை ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து தாடியில் நன்றாக தடவுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யுங்கள். தாடி முடி கருமையாக மாறும்.
Image Source: istock
பிரிங்கராஜ் எண்ணெயில் முடியை கருமையாக்கும் பண்புகள் உள்ளன. இந்த எண்ணெயை தாடியில் மசாஜ் செய்து 1 மணி நேரம் விட்டு விடுங்கள். இது தாடிக்கு இயற்கையான கருமையை கொடுக்கும்.
Image Source: istock
கருப்பு எள்ளை மிதமான தீயில் வைத்து வறுத்து சாலட் சாண்ட்விட்ச்களில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இது உங்கள் இளநரையை தடுக்கும். தாடியை கருமையாக வைக்க உதவுகிறது.
Image Source: istock
2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை தாடியில் தடவி 2-3 மணி நேரம் கழித்து சாதாரண நீரில் கழுவுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!