Jun 12, 2024
சில ஆண்கள் அடிக்கடி தலைக்கு குளிப்பார்கள். அடிக்கடி தலைக்கு குளிப்பதால் தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் நீங்கி விடும். எனவே வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை என குளித்து வரலாம்.
Image Source: istock
ஈரமான கூந்தலை எப்பொழுதும் வாரக் கூடாது. இதனால் முடி உடைந்து உதிர தொடங்கி விடும். அதே நேரத்தில் ஹேர் ட்ரையர்களை அதிக வெப்பத்தில் பயன்படுத்த வேண்டாம். இயற்கையாக உலர வையுங்கள்.
Image Source: pexels-com
தேங்காய் அல்லது சூடான ஆலிவ் எண்ணெயைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்யுங்கள். இப்படி உச்சந்தலையை மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சி மேம்படும்.
Image Source: istock
பொதுவாக ஆண்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினை வழுக்கை. எனவே ஆண்கள் ஆரம்பத்திலேயே முடி உதிர்தலை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
Image Source: istock
முட்டையில் புரதங்கள், கந்தகங்கள் மற்றும் அடிப்படை தாதுக்கள் ஏராளமாக உள்ளன. முட்டையின் மஞ்சள் கரு கூந்தலில் ஊடுருவி மயிர்க்கால்களை வலுவாக்குகிறது.
Image Source: istock
நீச்சல் குளங்களில் உள்ள குளோரின் தலைமுடியை மோசமாக்க வாய்ப்புள்ளது. எனவே நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்பு மென்மையான கண்டிஷனரை பயன்படுத்துங்கள். நீச்சல் தொப்பியைக் கூட அணிந்து கொள்ளுங்கள்.
Image Source: pexels-com
கெமிக்கல் நிறைந்த ஹேர் ஜெல், ஹேர் மெழுகு போன்ற பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தாதீர்கள். இயற்கையான கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துங்கள்.
Image Source: istock
கூந்தல் உதிர்தல் இருந்தால் அதற்கு போதிய போஷாக்குயின்மை தான் காரணம். எனவே ஜங்க் ஃபுட்களை அதிகமாக உண்பது, எண்ணெய் பலகாரங்கள் போன்றவை உங்கள் கூந்தலை பாதிக்க வாய்ப்புள்ளது.
Image Source: istock
ஆண்கள் தங்கள் தலைமுடியை பராமரிக்க இயற்கையான ஹேர் ஸ்பாவிற்கு செல்லலாம். இது தலைமுடியை எளிதாக பராமரிக்க உதவுகிறது. எனவே நிபுணர்கள் பரிந்துரைக்கும் முடி பராமரிப்பு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
Image Source: istock
Thanks For Reading!