Jun 27, 2024
முகப்பரு வருவதற்கு ஹார்மோன் மாற்றம், வெயிலில் அலைவது என ஏராளமான காரணங்கள் உள்ளது. அவை முக அழகை கெடுக்கக்கூடும். இந்தப் பதிவில், ஆண்கள் சருமத்தில் ஏற்படும் பருக்களை கட்டுப்படுத்தும் இயற்கை வழிகளை பற்றி பார்க்கலாம்
Image Source: istock
ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி உள்ளது. இது முகப்பருக்களை போக்க உதவியாக இருக்கும். இதனை பேஸ் மாஸ்க் ஆக தயாரித்து சருமத்தில் நேரடியாக அப்ளை செய்யலாம்
Image Source: istock
முதலில் ஆரஞ்சு தோலை பொடியாக நறுக்கவும். அதை பிளெண்டரில் போட்டு அரைத்துகொள்ளவும். அத்துடன் தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கி பெஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு வாஷ் செய்யவும்
Image Source: pexels-com
சருமத்தில் பருக்களை போக்க ஆப்பிள் சீடர் வினிகர் சிறந்த தேர்வாகும். இது சருமத்தை எக்ஸ்ஃபேலியேட் செய்து வீக்கத்தை போக்கக்கூடும்.
Image Source: istock
முதலில் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவில் மிக்ஸ் செய்துகொள்ளவும். ஒரு காட்டன் பந்தை அதில் நனைத்து பருக்கள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்துவந்தால், நல்ல பலனை காணலாம்
Image Source: istock
கற்றாழையில் சரும பிரச்சனைகளை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. சன்பர்ன் மற்றும் முகப்பரு வடுக்களை போக்க பெரிதும் உதவியாக இருக்கும்
Image Source: istock
கற்றாழை ஜெல்லை நேரடியாக பருக்கள் மீது தடவ செய்யலாம் (அ) கற்றாழை ஜெல்லுடன் தேனை சேர்த்து பருக்கள் இருக்கும் பகுதியில் தடவி, 10 நிமிடத்திற்கு பிறகு வாஷ் செய்யவும்
Image Source: istock
முகத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் சரும துளைகளை மூடி, முகப்பருக்களை உருவாக்கக்கூடும். புதினாவில் உள்ள கலவைகள், துளை அடைப்பை போக்கி முகப்பருவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடும்
Image Source: istock
முதலில் புதினாவை சிறிதாக நறுக்கி அரைக்கவும். பிறகு, ஓட்மீல்லை பவுடராக அரைத்துகொள்ளவும். இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து, முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரில் வாஷ் செய்ய வேண்டும். புதினா, சருமத்தை மிகவும் புத்துணர்ச்சியாக மாற்றக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!