Aug 9, 2024
By: Nivethaபல்வேறு வண்ணங்களை வகைப்படுத்தி அதனை கண்டறியும் திறன் என்பது மனித பார்வை திறனில் ஓர் அற்புத அம்சம். ஆனால் இந்த அம்சம் ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தவருக்கும் பொதுவானதா என்றால் நிச்சயம் இல்லை என்று கூறப்படுகிறது.
Image Source: pexels
ஆண்களை விட பெண்களால் அதிகளவு வண்ணங்களை பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள். நிறத்தை நாம் எவ்வகையில் கண்டறிகிறோம் என்பதை தீர்மானிக்கும் X குரோமோசோமில் என்னும் மரபணுக்கள் பெண்களுக்கு அதிகமுள்ளது என்பதே இதற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Image Source: pexels
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே ஏற்படும் இந்த நிறத்தை கண்டறியும் வேறுபாடுகள் நரம்பியலை அடிப்படையாக கொண்டது. கண்கள் மற்றும் அவர்களது மூளையில் அமைந்திருக்கும் மரபணுக்கள் மற்றும் கட்டமைப்புகளில் வேறுபாடுகள் உள்ளதாம்.
Image Source: istock
பெண்களுக்கு கோன் செல்களின் வளர்ச்சிக்கு காரணமாகவுள்ள நிறத்தை கண்டறியும் மரபணுக்கள் X குரோமோசோமில் அதிகம் உள்ளது என்பதால் இது பெண்களுக்கு சாத்தியப்படுகிறது. பொதுவாகவே பெண்களுக்கு 2 X குரோமோசோம்கள் இருக்கும், ஆனால் ஆண்களுக்கு ஒரு X குரோமோசோம் மற்றும் 1 Y குரோமோசோம் இருக்குமாம்.
Image Source: istock
பெண்களுக்கு இருக்கும் இந்த இரண்டு X குரோமோசோம்களிலும் மரபணு மாறுபாடுகள் இருக்கும் பட்சத்தில் அதிகளவிலான கோன் செல்களின் வகைகள் இருக்கக்கூடும். இது பெண்களை பரந்த நிறங்களை உணர அனுமதிக்கிறது.
Image Source: pexels
வண்ணங்களை உணருவதற்கு நமது விழித்திரையில் அமைந்திருக்கும் இந்த கோன் செல்கள் மிகவும் முக்கியமானது. ஷார்ட், மீடியம், லாங் என்று இந்த கோன் செல்கள் மூன்று வகைப்படுகிறது. இந்த மூன்றும் ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களுக்கு உணர்திறனை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: pexels
மேற்கூறியவாறு ஒளியின் வெவ்வேறு அலைநீளங்கள் செயல்படும் நிலையில் அது குறித்த தகவல்கள் மூளைக்கு அனுப்பப்படுகிறது. அதன் மூலம், நிறத்தை குறித்த உணர்வினை நமக்கு உருவாக்க இந்த கோன் செல்கள் பயன்படுகிறது.
Image Source: istock
ஆண்களை விட பெண்களுக்கு குரோமோசோம் ஒன்று அதிகமாக இருப்பதால், கூம்பு செல்களில் இது அதிகளவு மாறுபாடுகளை கொண்டுள்ளது. இது குறித்து ஒரு இதழ் நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் ஒருசில பெண்களுக்கு நான்காவது வகை கோன் செல்களும் இருப்பதால் அவர்களது வண்ண பாகுபாடு திறன்கள் அதிகரிக்கிறது என்று தெரியவந்துள்ளது.
Image Source: pexels
பெண்களுக்கு அவர்களது மூளையின் அளவோடு ஒப்பிட்டு பார்க்கையில் ஒரு மிகப்பெரிய முதன்மை காட்சி புறணி இருப்பதாக கூறப்படுகிறது. இது வண்ண உணர்வினை விரிவுபடுத்த உதவுகிறது, மேலும் இந்த கட்டமைப்பின் வேறுபாடு ஹார்மோன் தாக்கங்களோடு இணைந்து செயல்பட்டு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வண்ணங்களை உணர வழிவகுக்கிறது.
Image Source: pexels
Thanks For Reading!