Jul 15, 2024
By: Anojஆண்களின் தாடியில் நாய் ரோமங்களை விட அதிக பாக்டீரியாக்கள் இருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. தாடியை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வில்லையெனில், நீங்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தால் பாக்டீரியா பரவி முகப்பரு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்
Image Source: pexels-com
ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகரித்தால், அவர்களது நடத்தையிலும் மாற்றம் ஏற்படக்கூடும். குறிப்பாக, ஆபத்தான விஷயங்களிலும் ஈடுபடுவதற்கான ஆர்வம் அதிகரிக்கும். இதம் காரணமாகவே, ஆண்கள் அடிக்கடி விபத்துகள் மற்றும் கடுமையான காயங்களுக்கு ஆளாகுகின்றனர்
Image Source: pexels-com
ஆண்கள் அதிக அளவில் டிஜிட்டல் சாதனங்கள் அல்லது ஆன்லைன் கேமிங்கில் நேரத்தை செலவிடுவார்கள். இவை தூக்க சுழற்சியை மோசமாக பாதிப்பதோடு நிஜ உலகில் இருந்து தனித்து இருப்பதற்கான சூழலை உருவாக்கும்
Image Source: pexels-com
பெண்களை போல் உணவில் எவ்வித அக்கறையும் ஆண்களுக்கு இருக்க செய்யாது. மனதில் விரும்பியதை சாப்பிட செய்வார்கள். குறிப்பாக, அதிகமான ஜங்க் மற்றும் சர்க்கரை பானங்கள் நுகர்வால் உடல் பருமன் போன்ற நோய் பாதிப்புகளை அதிகமாக சந்திப்பார்கள்
Image Source: pexels-com
பெரும்பாலான ஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கிடையாது. அவற்றை மனதிற்குள் பூட்டி வைப்பதால், காலப்போக்கில் மனக்கவலை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
Image Source: pexels-com
பெண்களை விட ஆண்களுக்கு நிறக்குருடு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஏனென்றால், நிற பார்வைக்கு காரணமான மரபணுக்கள் X குரோமோசோமில் அமைந்துள்ளது. அவை ஆண்களுக்கு ஒன்று மட்டுமே உள்ளது. ஆனால், பெண்களுக்கு இரண்டு உள்ளது
Image Source: pexels-com
ஆண்களும் பெண்களும் தனித்துவமான கையெழுத்து பாணியை கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் பெண்கள் சிறிய கையெழுத்தும், ஆண்கள் பெரிய கையெழுத்தும் கொண்டிருப்பார்கள். அவை அதிக கோணலாகவும் இருக்கக்கூடும்.
Image Source: pexels-com
ஆண்கள் இயற்கையாகவே பிற ஆண்களுடன் நட்புறவு மற்றும் பிணைப்பை வலுவாக்கும் போக்கை கொண்டிருப்பார்கள். புதிதாக பார்த்த நபராக இருந்தாலும், பல தரப்பட்ட விஷயங்களை பகிர்ந்து சகோதரத்துவ உணர்வை வளர்ப்பார்கள்
Image Source: pexels-com
உடலை அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து பிரச்சனை இல்லாததை உறுதி செய்ய வேண்டும் எனும் அக்கறை கிடையாது. அதற்கு சரியான காரணம் கண்டறியவில்லை. ஆனால், பயத்தால் கூட மருத்துவ பரிசோதனை செய்யாமல் தள்ளிபோட செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
Image Source: istock
Thanks For Reading!