Jun 26, 2024
BY: Anojஆந்திரா மக்கள் இந்த காரசாரமான கத்திரிக்காய் பச்சடியை, சாதம் மற்றும் ரொட்டி வகைக்கு சைடிஷ்ஷாக சாப்பிட செய்வார்கள். அதை எப்படி சுவை மாறாமல் செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/theadrianskitchen
கத்திரிக்காய் - 2; வர மிளகாய் - 6; பூண்டு - 10 பற்கள்; எண்ணெய் - தேவையான அளவு; புளி - எலுமிச்சை சைஸ்; நறுக்கிய வெங்காயம் - கால் கப்; கறிவேப்பிலை - சிறிதளவு; உப்பு - தேவைக்கேற்ப
Image Source: istock
முதலில் கத்திரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் நிரப்பிய பவுலில் போட்டுக்கொள்ளவும்
Image Source: pexels-com
பிறகு, புளியை சுடு தண்ணீரில் போட்டு, சுமார் 10 நிமிடங்கள் தனியாக வைத்துவிடவும்
Image Source: istock
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய் மற்றும் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். கலவை வதங்கியதும் பிளெண்டரில் போட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும்
Image Source: istock
கடாயில் மீண்டும் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு, தனியாக வைத்துவிடவும்
Image Source: istock
அகலமான பவுல் ஒன்றில், அரைத்த வர மிளகாய் - பூண்டு கலவை, வறுத்த கத்திரிக்காயை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். அடுத்து, புளிச்சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளவும்
Image Source: istock
பிறகு, நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துக்கொள்ளவும்
Image Source: istock
அவ்வளவு தான், காரசாரமான கத்திரிக்காய் பச்சடி ரெடியாகிவிட்டது. இதை சூடான சாதத்துடன் சேர்த்து சிறிது நெய் விட்டு சாப்பிட செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!