[ad_1] ஆந்திரா ஸ்பெஷல்.. காரசாரமான 'மட்டன் கிரேவி' ரெசிபி

May 13, 2024

BY: Anoj

ஆந்திரா ஸ்பெஷல்.. காரசாரமான 'மட்டன் கிரேவி' ரெசிபி

மட்டன் கிரேவி செய்முறை

மட்டன் அனைவருக்கும் பிடித்தமான அசைவ உணவாகும். அதை ஆந்திரா ஸ்டைலில் காரசாரமாக செய்வது எப்படி என்பதை இஹ்கு பார்க்கலாம்

Image Source: istock

தேவையான பொருட்கள்

மட்டன் - அரை கிலோ; மஞ்சள் - கால் டீஸ்பூன்; உப்பு - தேவைக்கேற்ப; இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்; எண்ணெய் - தேவையான அளவு; கொத்தமல்லி - சிறிதளவு; கறிவேப்பிலை - சிறிதளவு; ஏலக்காய் - 1; கிராம்பு - 2; சோம்பு - கால் டீஸ்பூன்

Image Source: istock

தேவையான பொருட்கள்

நறுக்கிய வெங்காயம் - 2; பச்சை மிளகாய் - 2; தக்காளி - 2; கொத்தமல்லி விதை - அரை டீஸ்பூன்; மிளகு - அரை டீஸ்பூன்; மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்; மிளகு தூள் - அரை டீஸ்பூன்; பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்; பட்டை - 2

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் அடுப்பில் குக்கரை வைத்து மட்டன், மஞ்சள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிட வேண்டும். சுமார் 6 விசில் வரும் வரை மட்டன் வேகவிட வேண்டும். பிறகு மட்டன் வேகவைத்த தண்ணீரை தனி பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 2

இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்

Image Source: pexels-com

செய்முறை படி - 3

அடுத்து, இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய், மிளகாய் தூள் மற்றும் மிளகு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, வேகவைத்த மட்டன் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்

Image Source: istock

செய்முறை படி - 4

இதற்கிடையில் மிக்ஸி ஜாரில் ஏலக்காய், கிராம்பு, பெருஞ்சீரகம், பட்டை, கொத்தமல்லி விதை, மிளகு மற்றும் சோம்பு ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். இந்த கலவையை கடாயில் மட்டனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 5

இப்போது மட்டன் வேகவைத்த நீரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கிரேவி நல்ல பதத்திற்கு வந்ததும் மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்

Image Source: istock

டேஸ்டி மட்டன் கிரேவி ரெடி

இறுதியாக, கொத்தமல்லி இழையை தூவினால் டேஸ்டியான மட்டன் கிரேவி ரெடி. இதை சப்பாத்தி அல்லது சாதத்துடன் தொட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்

Image Source: istock

Thanks For Reading!

Next: தலைச்சேரி ஸ்பெஷல் ‘கப்பை முட்டை பூர்ஜி’ செய்முறை!

[ad_2]