Jul 15, 2024
வெள்ளை சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி என அனைத்து வகை உணவுக்கும் தோதாக இருக்கும் பச்சடி ஒன்றினை தக்காளி பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
தக்காளி - 4 | வெங்காயம் - 2 | வெல்லம் பொடி - 1 ஸ்பூன் | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு | உளுந்து - 1 ஸ்பூன் | காய்ந்த மிளகாய் - 3 | கறிவேப்பிலை - 1 கொத்து
Image Source: istock
கடுகு - ¼ ஸ்பூன் | மல்லி விதை - 1 ஸ்பூன் | சீரகம் - ¼ ஸ்பூன் | கடலை பருப்பு - 1 ஸ்பூன் | வேர்க்கடலை - 3 ஸ்பூன் | பூண்டு பல் - 4 | பச்சை மிளகாய் - 3 | கொத்தமல்லி - 1 கொத்து
Image Source: istock
முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் கடுகு, மல்லி விதை, சீரகம், கடலை பருப்பு, வேர்க்கடலை, பூண்டு பல், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து எண்ணெயில் இல்லாமல் வறுத்து எடுக்கவும்.
Image Source: istock
இச்சேர்மம் ஆறுவதற்கு இடையில் எடுத்துகொகொண்ட தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழை ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
Image Source: pexels-com
தொடர்ந்து கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வெந்தபின் இதில் தக்காளி சேர்த்து நன்கு மசிய வேக வைத்து இறக்கவும்!
Image Source: istock
இதனிடையே ஆற வைட்ட மசாலா சேர்மங்களை மிக்ஸி ஜார் ஒன்றில் வெல்ல பொடியுடன் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் இதே மிக்ஸி ஜாரில் எண்ணெயில் வதக்கி எடுத்த தக்காளி - வெங்காய சேர்மத்தை சேர்த்து நன்கு விழுதாக அரைத்து மசாலாவுடன் சேர்த்து கலந்துவிடவும்.iStock
Image Source: istock
பின் இந்த சேர்மத்திற்கு தாளிப்பு கொடுக்க, தாளிப்பு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, பச்சடியில் சேர்த்துவிட ஆந்திரா தக்காளி பச்சடி ரெடி!
Image Source: istock
Thanks For Reading!