Jul 6, 2024
BY: Anojமுகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ஆந்திரா ஸ்பெஷல் 'பெசரட்டு' என்னும் பச்சை பயறு தோசையை விரும்பி சாப்பிடுவார். அதை எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com
பச்சை பயறு - 1 கப்; அரிசி - கால் கப்; இஞ்சி - சிறிய துண்டு; கொத்தமல்லி - சிறிதளவு; பூண்டு - 2 பற்கள்; பச்சை மிளகாய் - 2; எண்ணெய் - தேவையான அளவு; நறுக்கிய வெங்காயம் - கால் கப்; எண்ணெய்- தேவையான அளவு
Image Source: istock
முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து, 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்
Image Source: pexels-com
ஊறவைத்த அரிசி மற்றும் பச்சை பயறை பிளெண்டருக்கு மாற்ற வேண்டும்
Image Source: istock
அத்துடன் இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, ப.மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்
Image Source: istock
பிறகு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, கலவையை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்
Image Source: istock
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி சூடாக்கவும். மாவை வட்டவடிவில் ஊற்ற வேண்டும். தேவைப்பட்டால் அதன் ஓரங்களில் சில சொட்டு எண்ணெய் விடலாம்
Image Source: instagram-com/sengut2006
அதன் மீது நறுக்கிய வெங்காயத்தை தூவ வேண்டும். ஒரு பக்கம் வெந்ததும், தோசையை திருப்பிப்போட்டு வேகவைக்கவும்
Image Source: instagram-com/sengut2006
அவ்வளவு தான், ஆந்திரா பெசரட்டு ரெடி. இதை ஆந்திரா ஸ்பெஷல் இஞ்சி சட்னியுடன் சாப்பிடுங்கள் அற்புதமாக இருக்கும்
Image Source: instagram-com/yummee-with-amee
Thanks For Reading!