[ad_1] ஆனந்த் அம்பானி திருமணத்தில் 60 வயதிலும் ஜொலிக்கும் 'நீதா அம்பானி' இதுதான் ரகசியம்

Jul 6, 2024

ஆனந்த் அம்பானி திருமணத்தில் 60 வயதிலும் ஜொலிக்கும் 'நீதா அம்பானி' இதுதான் ரகசியம்

Anoj

நீதா அம்பானி

ஆனந்த் அம்பானி திருமண கொண்டாடத்தில் புது மருமகள் ராதிகாவுக்கு இணையாக நீதா அம்பானி கண்ணை கவரும் அழகில் ஜொலிக்கிறார். 60 வயதிலும் அழகை பராமரிக்க நீதா அம்பானி என்ன செய்கிறார் என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/officenitaambani

தினசரி சரும பராமரிப்பு

நீதா அம்பானி தினமும் 2 முறை முகத்தை சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் செய்கிறார். அவரது சரும வகைக்கு ஏற்ற பிரீமியம் சரும தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துகிறார்

Image Source: instagram-com

பேஸ் மாஸ்க் பயன்பாடு

முக அழகை பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் பேஸ் மாஸ்க் பயன்படுத்துகிறார். இதுதவிர, சருமத்தை அவ்வப்போது எக்ஸ்ஃபோலியேட் செய்து இறந்த செல்களை நீக்குகிறார்

Image Source: instagram-com/officenitaambani

நீரேற்றம் தக்க வைப்பது

சரும ஆரோக்கியத்திற்கு நீரேற்றம் அவசியம் என்பதை நன்கு புரிந்துள்ளார். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதோடு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தினசரி உணவு முறையில் சேர்த்துகொள்கிறார்.

Image Source: instagram-com/officenitaambani

நீதா அம்பானி டயட்

ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த உணவுகளை மட்டுமே உட்கொள்கிறார். சரும ஆரோக்கியத்தை உள்ளிருந்து பாதுகாக்க பச்சை இலை காய்கறிகள், பெர்ரி, நட்ஸ் மற்றும் மீன்களை தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்கிறார்

Image Source: instagram-com/officenitaambani

வொர்க்அவுட் முறை

நீதா அம்பானியின் அழகு பராமரிப்பில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. கார்டியோ, ஸ்ட்ரென்த் டிரெயினிங் மற்றும் யோகா காம்பினேஷன் பின்பற்றுகிறார். இவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் பயன்படுகிறது

Image Source: instagram-com/officenitaambani

மன அழுத்தம் நீக்குதல்

சருமம் வயதாகுவதை தடுத்திட மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும். தியானம் போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளை தவறாமல் செய்கிறார். மனதை ரிலாக்ஸாக வைத்திருப்பது சரும செல்கள் புத்துயிர் பெற பெரிதும் உதவக்கூடும்

Image Source: instagram-com/officenitaambani

சன்ஸ்கிரீன் பயன்பாடு

சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை தடுத்திட அதிக திறன் கொண்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்த செய்கிறார். அவற்றை அப்ளை செய்யாமல் வீட்டை விட்டு வெளியேறுவது கிடையாது

Image Source: instagram-com/officenitaambani

பிற விஷயங்கள்

தினசரி சரும பராமரிப்பை தாண்டி அழகு சிகிச்சைகளும் மேற்கொள்கிறார். பேஷியல், மசாஜ் மற்றும் லேசர் தெரபி மூலம் சரும பிரச்சனைகளை சரிசெய்யவும், இளமை தோற்றத்தையும் தக்கவைக்கவும் செய்கிறார்

Image Source: instagram-com/officenitaambani

Thanks For Reading!

Next: முகம் அழகு மற்றும் பொலிவு பெற இந்த 'தேன் சீரம்' யூஸ் பண்ணுங்க!

[ad_2]