Jun 1, 2024
ஆன்லைன் மற்றும் பாரம்பரிய கல்வி முறைகள் ஆகிய இரண்டிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. மாணவர்களின் தேவை, கற்றல் திறன் மற்றும் வாழ்க்கை சூழல் ஆகியவற்றை பொருத்து ஒன்றை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.
Image Source: pexels-com
ஆன்லைன் கல்வியில் மாணவர்கள் அவர்களின் வசதிக்கேற்ப எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நேரத்தை தேர்வு செய்து படிக்கலாம். இருப்பினும் இதற்கு சுய ஒழுக்கமும், நேர மேலாண்மை திறனும் அவசியம்.
Image Source: pexels-com
பாரம்பரிய கல்வியானது சக மாணவர்களுடன் நேரில் கலந்துரையாடுதல், குழுக்களாக பணிகளை செய்தல் மற்றும் தோழமையான உறவுகளுக்கு வழிவகுக்கும். மாறாக ஆன்லைன் கல்வியில் நேரடியான மற்றும் சமூக தொடர்புகள் குறைவு.
Image Source: pexels-com
பாரம்பரிய கல்வியானது ஆய்வகங்கள், பயிற்சி பட்டறைகளை உள்ளடக்கிய செயல்முறை கல்வியை வழங்குகிறது. ஆன்லைன் கல்வி இதற்கு இணையான நடைமுறை அனுபவத்தை வழங்காது.
Image Source: pexels-com
பாரம்பரிய கல்வி குறிப்பிட்ட அட்டவணை மற்றும் வரையறுக்கப்பட்ட பாடத்திட்ட கட்டமைப்பை கொண்டது. இந்த அமைப்பு அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது, மற்ற பொறுப்புகளுடன் படிப்பையும் கையாளுவது கடினமாக அமையலாம்.
Image Source: istock
கற்றல் தேவைக்களுக்கான செலவுகள் ஆன்லைன் கல்வி முறையில் மலிவாக இருக்கும். ஏனேனில், பாரம்பரியக் கல்வியானது பொதுவாக அதிக கல்விக் கட்டணம் மற்றும் கூடுதல் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை உள்ளடக்கியது.
Image Source: pexels-com
பாரம்பரிய கல்வி முறையுடன் ஒப்பிடும்போது ஆன்லைன் தளம் பெரும்பாலும் பரந்த அளவிலான பல்வேறு பாடத்திட்டங்களை வழங்குகிறது. இருப்பினும் தங்களின் பட்டத்தின் மதிப்பை உறுதிப்படுத்த ஆன்லைன் நிறுவனத்தின் அங்கீகாரத்தை கவனிக்கவும்.
Image Source: pexels-com
பரம்பரிய கல்வியானது தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் சந்தேகங்களை தேளிவுபடுத்த பயிற்றுனர்களை நேரடியாகவும், உடனடியாகவும் அணுக அனுமதிக்கிறது. ஆன்லைன் முறையில் இந்த வாய்ப்பு குறைவு.
Image Source: pexels-com
ஆன்லைன் கல்விக்கு கண்டிப்பான சுயக்கட்டுப்பாடும், அமைதியான சூழலும் அவசியம். இருப்பினும், பாரம்பரிய கல்வியிலும் வகுப்பறை குறுக்கீடுகள் மற்றும் கவனச்சிதறல்களுக்கன வாய்ப்புகள் உள்ளது.
Image Source: pexels-com
Thanks For Reading!