Jun 28, 2024
By: Anojசிலர் நேரில் மிகவும் நட்பாக நடந்துகொண்டாலும், உங்களுக்கு பின்னால் விமர்சனங்களையும், குழிப்பறிக்கும் செயலிலும் ஈடுபடவார்கள். அத்தகைய போலி தனத்துடன் பழகும் ஊழியர்களை, அலுவலகத்தில் கண்டறியும் வழிகளை இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
போலியாக பழகுபவர்களை அவரது நடத்தை வைத்தே எளிதாக கண்டறிந்துவிடலாம். ஒரு நேரம் நட்பாக நடந்து கொள்வார்கள். ஆனால், பிறகு கண்டுக்காத போல் இருப்பார்கள்
Image Source: pexels-com
அலுவலகத்தில் பாராட்டு கிடைப்பது சகஜமானது என்றாலும், போலியான நபர்கள் அதிகமாக பாராட்ட செய்வார்கள். உங்களிடமிருந்து ஏதேனும் விஷயத்தை பெறுவதற்காக, அளவுக்கு அதிகமாக ஐஸ் வைப்பார்கள். அந்த பாராட்டுகளை உன்னிப்பாக கவனித்தால் உண்மையை கண்டறிந்துவிடலாம்
Image Source: pexels-com
பிறரை பற்றி தவறான விஷயங்களை பேசும் சக ஊழியர்களை கவனிக்க செய்யுங்கள். வதந்திகளை பரப்புவது மட்டுமின்றி சக ஊழியர்களின் திறனை மட்டம் தட்டி பேசிகொண்டிருப்பார்கள். ஒருவர் இத்தகைய நடத்தையில் தொடர்ந்து ஈடுபட்டால் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்
Image Source: istock
போலியாக பழகும் நபர்கள் தங்களது இலக்கை அடைய எந்த எல்லைக்கும் செல்வார்கள். தந்திரமான செயல்கள் மூலம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து மற்றவர்களின் உழைப்பையும் சுரண்ட செய்வார்கள்
Image Source: pexels-com
போலி நபர்கள் சுயநலம் குணத்தை கொண்டிருப்பார்கள். பிறரை காட்டிலும் தனது தேவைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். கவனம், பாராட்டு அல்லது அங்கீகாரம் பெறும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள். நன்கு கவனித்தால் கூட்டத்தில் கருப்பு ஆடாக சுற்றித்திரியும் நபர்களை எளிதில் கண்டறியலாம்
Image Source: pexels-com
உண்மையான நபர்கள் தங்கள் செயல்களுக்கும், தவறுகளுக்கும் பொறுப்பேற்று கொள்வார்கள். ஆனால், போலி நபர்கள் மற்றவர்களின் மீது பழியை திசை திருப்புவதில் மட்டுமே குறியாக இருப்பார்கள்.
Image Source: pexels-com
உறவில் நம்பிக்கை மிகவும் அவசியம். ஆனால், போலி நபர்கள் கொடுத்து வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அடிக்கடி சொன்ன வாக்கை மீறும் நபர்களிடம் கூடுதல் கவனத்துடன் இருங்கள்
Image Source: pexels-com
போலி தன்மை வெளிப்படுத்தும் ஊழியர்களிடம் அளவோடு பழகுங்கள். உங்களுக்கென தனிப்பட்ட எல்லைகளை அமைந்துகொள்ளுங்கள். பிறரை பற்றி யாரிடமும் தவறாக பேசாதீர்கள். போலியான நபரிடம் இருந்து தப்பிக்க சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளின் உதவியை நாடுவதில் தயக்கம் கொள்ள வேண்டாம்
Image Source: pexels-com
Thanks For Reading!